விட்டுக்கொடுத்தல் என்பது சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அது ஒரு இணக்கமான சங்கதிதான். பள்ளிப்பருவத்தில் பென்சில் ,பேனாவில் தொடங்கி,வளர்ந்து பொருட்களில் கலந்து ,குடும்பத்தில் சொத்து பிரச்சனை தீர்த்து. கட்சிகளில் சீட்டு பிரிப்பதில் விரிந்து..இரண்டு தேசங்கள் எல்லைப் பிரச்சனையில் கையெழுத்திடும் வரை வாழவைக்கக் கூடிய ஒரு அம்சம்தான். இதுவே தவறாகப் புரியப்படும் போது அபத்தங்களே மிச்சமாகின்றன. எப்படியெனின் , தன் நண்பனோ, உடன்பிறப்போ யாராயினும்,கணவன் மனைவி,பெற்றவர் ,உற்றவர் என்ற பந்தங்களிலும் சரி, கட்சிகளுக்குள்ளும் சரி ,பரிபாலனம் செய்யும் அரசிலும் சரி செய்யும் தவறுகள் எத்தகையதாயினும் அவை பகிரங்கமாகவே மூடி மறைக்கப்பட்டு வருமானால், எப்படி இவர்களை நாம் விட்டுக் கொடுப்பது என்று நாம் நினைப்போமானால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். பொத்தி, பொத்தி
வைத்தால் எதுவும் வீசித்தானே கிடக்கும்.
வைத்தால் எதுவும் வீசித்தானே கிடக்கும்.
No comments:
Post a Comment