குறளையுள் நட்புஅளவு தோன்றும் ; உறல்இனிய
சால்பினில் தோன்றும் குடிமையும்; பால்போலும்
தூய்மையில் தோன்றும் பிரமாணம், இம்மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு.
...நல்லாதனார்.
நாம் துன்பப் படும் போது ,நமக்கு துணை நின்ற நட்பின் தன்மை திண்மையுள்ளது ;
நட்பானவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் பண்பானது அவர்தம் பிறந்த குடிப்பிறப்பை சொல்லும்.
கலப்படமில்லாத பாலின் வெண்மை நிறமொத்த நண்பர்களின் உண்மைமொழிகள் அவர்தம் தரத்தினை உள்ளபடி செப்பும். இந்த மூன்று நிலைகளுமே உண்மைக்கும் மேலான வாய்மையுடையவர்கள் கடைப் பிடிக்கும் வழக்குகளாகும்.
கோதைதனபாலன்

No comments:
Post a Comment