Tuesday, 21 February 2012

நான்மணிக்கடிகை

 புகைவித்தாப் பொங்குஅழல் தோன்றும்  சிறந்த
 நகைவித்தாத்  தோன்றும் உவகை -  பகைஒருவன்
முன்னம்வித் தாக முளைக்கும்   முளைத்தபின்
இன்னாவித் தாகி விடும்.


........விளம்பிநாகனார்


கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கு ,  அதன் புகை அதற்கான விதையாக அமையும்;    மலர்ச்சி கொண்ட முகமே உள்ளத்தில் புரளும் மகிழ்ச்சிக்கு விதையாக அமையும் ;  ஒருவனுக்கு ஏற்படும் பகையானது முன்பு செய்த அவனது பாவசெயலுககான விதையாக மாறும்.  அவ்விதம் மாறி முளைத்து   பெருகி வருமானால்   எந்நாளும்  சேர்ந்துவிடக் கூடிய  துன்பங்களின் வித்துக்களாக மாறிவிடும்.



கோதைதனபாலன்.

No comments:

Post a Comment