முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூல் பெருங்கேள்வி நூல்கரை கண்டாலும்
மைந்நீர்மை இன்றி மயல்அறுபபான் இம்மூவர்
மெய்நீர்மை மேல்நிற் பவர்.
........நல்லாதனார்.
கடல் அலை போலன்றி, ஆழ்கடல் போன்று ஆரப்பரிக்காத அமைதியான
அறிவுடையவனும்,
நுட்பமான சிந்தனையோடும், மிகுந்த கேள்வியறிவோடும் நூல்களில்
தெரிவிக்கப்பட்ட முடிவுகளைத் தெளிவுற தெரிந்தெடுப்பவனும்,
குற்றமாக கருதப்படும் இயல்புகள் இல்லாது மதிமயக்கம் கொள்ள
வைக்கக்கூடிய ஆசைகளைத் தவிர்த்தவன் ...ஆகிய இமமூவருமே
உண்மை வழி நின்று வாழ்வில் என்றும் நிலைத்திருப்பவர்கள்.
கோதைதனபாலன்.

No comments:
Post a Comment