Tuesday, 10 April 2012

.நாலடியார்

விரிநிற நாகம்  விடருள  தேனும்
 உருமின் கடுஞ்சினம் சேணின்று உட்கும்
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

......நாலடியார்


படம் விரித்தாடும் நாகப்பாம்பும் நிலத்தின் வெடிப்புக்குள்ளே மறைந்திருக்கும் போது தூரத்து இடி முழக்கம் கேட்டு அஞ்சுறும்.அது போல் என்னதான், எப்படித்தானும் பாதுகாவலுடன் தவறு செய்தவர் இருப்பினும் அவர்கள் மேன்மை மிக்கப் பெரியவர்கள் சினம் கொள்வார்களானால் தப்பிப் பிழைக்கமாட்டார்.

No comments:

Post a Comment