Wednesday, 11 April 2012

நாலடியார்

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.


........... நாலடியார்


தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும், சிறிதும் மதியாது அவமதிப்பாரும் அவமதிக்கட்டும்..அற்ப ஈயும் நம்மை மிதித்து தலை மீதேறி அம ரும் நிலை உணர்ந்து 
சான்றோர் தம்மை அவமதிப்பவர் மீது சினம் ஏற்படக் காரணம் இருந்தும் சினம் 
கொள்ளாது இருப்பதே நல்லதென்று அதைத் தவிர்ப்பார்.   

No comments:

Post a Comment