பழங்காலஇலக்கியத்திற்கு அக்காலத்து நாட்டுப் பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம்.இயற்கையோடு ஒட்டி வாழும் கிராமத்து மக்களில் இயல்பான உணர்ச்சிகளில் உள்ள புதுமைகளை நாட்டுப் பாடல்களில் காணலாம்.
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழ்தாய் கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லி அழு
மாமி அடித்தாலோ உன்னை
மல்லிகைப் பூச்செண்டாலே
மாமன் அடித்தானோ உன்னை
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழ்தாய் கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லி அழு
மாமி அடித்தாலோ உன்னை
மல்லிகைப் பூச்செண்டாலே
மாமன் அடித்தானோ உன்னை
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!
No comments:
Post a Comment