முக்கூடற் பள்ளு
தொன்மைத் தமிழில் மென்மையுறு சொற்களுக்குரிய மேன்மை நடையில் உள்ளத்தைக் கொள்ளையிடும் அருமைக்குரியது இந்த முக்கூடற்பள்ளு.இவற்றில் பலவும் பந்துவராளி, பைரவி, சங்கராபரணம் ,சுருட்டி ,கல்யாணி,காம்போதி, ஆனந்த பைரவி,புன்னகவராளி ஆகிய ராகங்கள் அமைய , ஆதி தாளம், அட தாளம், ரூபக தாளம் போன்றவை பொருந்தச் செவிக்கு விருந்தாகவும் பாடப் பெற்ற பெருமைக்குரியவையாகும்.
தன் நாட்டின் பெருமை பேசும் ஒரு பாடல்.
காயக் கண்டது சூரியகாந்தி
கலங்கக் கண்டது வெந்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தானம்
சீவல மங்கைத் தென்கரை நாடே
பொருள் விளக்கம்.
வெயில் காயுமே தவிர மக்கள் வயிறு காயாது; தயிர்க் கட்டி கலங்கும்,மக்களின் மனம் கலங்காது; நாளும் கிழமையும் மடியலாம், மக்கள் பசியால் மடிந்திடார்; நெற்கதிர்கள் முற்றிச் சாயும், மக்கள் தலை சாய்ந்து நடந்திடார். இத்தகைய பெருமைக்குரியது தென்கரை நாடு.
அன்பு கோதை,
ReplyDeleteஅருமையான முக்கூடற்பள்ளு.
காய,மாய,சாய,தேய என்றெல்லாம்
எதிர்மறையான சொற்களில் நாட்டின் வளத்தை
எடுத்துச் சொல்லும் பாங்கு மகிழ்ந்து உணரத்தக்கது.
நன்றி.
நன்றி அம்மா.
Delete