Saturday, 11 February 2012

திரிகடுகம்

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்;செருவாய்ப்பச் 
செய்தவை நாடாச் சிறப்புடைமை; - எய்தப்
பலநாடி நல்லவை கற்றல்; இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.


.... நல்லாதனார். 

நமக்கு வருகின்ற வருவாயில் கால் பங்களவு எடுத்து அறம் சார்ந்த செய்து வருதல் வேண்டும்.
தம்மைக் காக்கும் போரின் வெற்றி கண்டவிடத்து தமது பங்கு எந்த அளவில் இருந்தாலும் அதற்கான பிரதி பலன் எதிர் பாராது இருத்தல்.
பல நல்ல நூல்வழியோ,கேள்வி ஞானமாகவோ, அனுபவ விளக்கங்களாக பற்பல அறிந்திட்ட சங்கதிகள் ஆராய்ந்து நல்லவற்றை தெரிந்தெடுத்து அதன் வழி நிற்றல். 




இம்மூன்று கொள்கைகளும் நலம் மீது நாட்டம் கொண்டு இயங்கும் நல்ல மனிதர்கள் கடைப்பிடிப்பதாவது. 





கோதைதனபாலன். 



No comments:

Post a Comment