Friday, 3 January 2014

 சிந்தனை செதுக்கல் 


பகைவரை அனுசரிக்கலாம்..விரோதியை மன்னிக்கலாம்...ஆனால் விஷமதி கொண்டோரை அருகில் வைக்கவும் கூடாது... ஒதுங்கு அல்லது ஒடுக்கு. 



கோதை தனபாலன்.





கையளவேதான் இதயம் வைத்தான் ; கடல்போல் அதிலே ஆசை வைத்தான்...
மெய்யும் பொய்யும் கலந்து வைத்தான்.... அவன் இறைவன்.

நினைவலைகள் மனதுக்கு இதமாகும்போது , நிகழ்வலைகள் மனம் கவர்வதில்லை. 
நிகழ்வலைகள் மனதில் தடுமாறும்போது வரும் அலைகள் பிரமிப்பாகின்றன.


கோதை தனபாலன்.




போடா போடா. பைத்தியமே ! உன் புத்திக்கு வேண்டும் வைத்தியமே , வைத்தியமே.
அனுபவத்தில் வந்த பாடம், மனதில் கொண்ட வலி (வேதனை ) நம் பாதையை தீர்மானிக்கிறது... அது விதி வழி செல்கிறது. வாழும்வரை போராடு... நம் புத்தி நம் கையில்.


கோதை தனபாலன் 







சிந்தனை செதுக்கல் 


நாம் வாழ்வில் எப்போதும் பிடித்தாற்போல் பேசுபவரையே நாடிச் செல்கிறோம் . அவர்கள் வாசமில்லா அழகு காட்டு மலர்கள்.
நம்மை சுற்றி நிச்சயம் அக்கறையும் அன்பும் கொண்டவர் இந்தப் பேச்சிற்கு உடன்படார். இவர்கள் அன்றலர்ந்து மடியும் சின்ன மலர்கள் என்றாலும் வீசும் வாச மலர்கள்.

அந்த மணம் நுகரும் அருமை தெரிந்தால் நாம் அதி புத்திசாலிகளே. எது எப்படியாயினும் இரு வகை மலர்களுக்குளேயே நம் வாழ்வின் மகிழ்வு அடங்கியுள்ளது. வாழ்வோம் , ரசிப்போம். ரசனை இல்லாத வாழ்வில் சுவை இல்லை. ஈர்ப்பு இல்லாத மனதில் ரசனை இல்லை.


 
கோதைதனபாலன்







வாழ்வுக்கு பணம் ஆதாரம் ; பசிக்கு உணவு ஆதாரம்;
உயிருக்கு உடல் ஆதாரம் ; மனதுக்கு நிறைவு ஆதாரம் ;
வாழ்க்கைக்கு நெறிபிறழாமை ஆதாரம் ; நிலையென 
எண்ண அவன்அன்றி எதுஆதாரம் .


கோதை தனபாலன்.






பயன் யாதென வாளாவிருக்குமோ மனம் 
பயன் இல்லையென எதுவும் உண்டோ 
பயன் உயிருக்கு உடல் உள்ளவரை
பயன் படாதபக்தியும் புத்தியும் உண்டோ

                            கோதை தனபாலன்.


சிந்தனை செதுக்கல்



தெளிவான சிந்தை கருத்தான பாதையைத் தெரிந்தெடுக்கும் ..

கற்ற கல்வி செல்லும் பாதையை சீரமைக்கும்.



வரும் அலைகள் கண்ணுக்கு அழகே !
உயரும் அலைகள் மனதுக்கு உற்சாகமே. 
சென்ற நினைவுகள் திரும்பும் அலைகள் 
வந்துமோதி செல்வது அதனதன் இலக்கணமே. 


பணம் ஒன்றே மனிதன் கண்டது.
மற்றவை அவன்வழி வந்தது. மனிதன் பெரிதா,
 அவனைப் படைத்த சக்தி பெரிதா..!
மயக்கம் ஏன் ?


கோதை தனபாலன்
 

Tuesday, 7 May 2013

தனிமைச்சிறை கரையேறுமா..!



தனிமைச்சிறை கரையேறுமா..!

by Kothai Dhanabalan (Notes) on Monday, May 6, 2013 at 3:24pm





மழலைப் பருவத்தில் விடுதியில்
பெற்றவர்தாம் விடதன் ஒத்தநண்பர் 
மத்தியில் தனிமை இல்லை. 
பிரிவின் தாக்கம் தான்என்ற ஆக்கம் ஆனது.
பிஞ்சுமனத்தில் துணிச்சல், விளைச்சலானது.
மாணவப் பருவம் எட்டியது 
எண்ணச் செறிவுகள் அடர்ந்தது 
விரிந்த ஞானம் களையெடுத்தது 
துணை என்றதும் ஏககரம் கிட்டியது 
நட்புகளின் பாதையில் மனம் திளைத்தது. 
காயா, பழமா என்றார்...  வீணே 
காய் என்றேன்.. ..ஒதுங்கினர் அவர் 
விளையாட்டாய்  ஒருநாள் தனிமைச் சிறை 
ஐயகோ!  அது கொடுமை.! மீண்டும் 
பழம் என்றேன். நேசக்கரங்கள் நீண்டு வந்தன.
வயதில் வாழ்க்கைப் பாடம் 
அங்கே புது உலகம் 
கடமைப் பாதைகள் கட்டுப்பாடுகளில் 
அன்றலர்ந்த பூவாய் அதன் முடிவாய் 
அவ்வப்போது முகிழ்க்கும் நட்புமொட்டுக்கள் 
சுகந்தம் தந்தது , இனிமையானது நோய் எனும் சாக்காடும் சேர்ந்தது 
தனிமை தழுவியது.. ஆரத் தழுவியது 
ஆனால் சிந்தை விரிந்தது  
தேர்ந்த பக்குவம் கைகொடுத்தது  
நூல்கள் நட்பாயின, வண்ணம் தீட்டுதல் 
தந்தது. மகிழ்வே. இசைகேட்க தடையேதுமில்லை 
உயிரில் உயிராய் இசை கலந்தது
தெய்வத்தின் அருள் சேவையானது 
மறுமலர்ச்சி வாழ்வில் வந்தது .
புதுப்புது கடமைகள் ஈடேறின அந்தோ..!
மறுபடியும் தனிமைச் சிறை.. 
உறவுகள் கடமைகளாக, பகிர்வுகள் இனி யாரிடம்?  
வாழ்வின் எல்லையில், வாழ்ந்திடும் தீர்க்கம் 
எதுவரை எப்படித்தான்  யாரறிவார் ! இதுவரை
வாராது வந்த மாமுனி போல் 
பாராது வந்த நட்பு .. அதுகிளறிய  
பழைய நேசஉணர்வுகள்.. இனிஅங்கே 
வெறுமை இல்லை, பகிருமிடம் ஆனது !  
தனிமைச்சிறை கரையேறும் படலமானதே!
     


......   கோதைதனபாலன்      
 




நல்லோர் ஊக்கம்..




நீ படு அது உன் கர்மவினை - இதை
 

நான் சொல்ல மாட்டேன் 
நீ எழு ! சிலிர்ப்பு உன் எண்ணங்களிலே..
 

இதைச் சொல்வேன்
 
ஆறுதல் மொழிகள் .. அவற்றில்

மனம் சமநிலை அடையலாம்

அப்படியே விட்டால் வீழுமே உன் நிலை

நல்லோர் ஊக்கம் ..அங்கே

சமைத்திடுமே புது எழுச்சியை !


நாளும் சொல்வேன் நான் உனக்கு

எனக்குச் சொன்னவர் வழி நின்று.


...கோதை தனபாலன்