Exchange of our views in any field will provide good ground for our good thinkings and thereto choose a righteous path for us.
Wednesday, 11 July 2012
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: இரப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க--முறைப்புதவின் துயம் புகூஉந் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். .....
நாலடியார்
இரப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க--முறைப்புதவின்
துயம் புகூஉந் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
....நாலடியார்
நாம் தருவது சிறிதென்று கருதாது ,இல்லை என்று சொல்லாது எப்போதும் பயனுடைய அறத்தை அனைவரிடத்தும் செய்க.அது வாயில் தோறும பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல ,மெல்ல மெல்ல புண்ணிய பயனைப் பூரணமாக்கும்.

Open Window: நாலடியார்: கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொ...
நாலடியார்
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல்
...நாலடியார்
குறுங்கோலால் அடித்து எழுப்பப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் உள்ளோர் மட்டுமே கேட்பர்.மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் உள்ளோர் மட்டுமே கேட்பர்.ஆனால் 'தகுதியுடையவர்க்கு ஈந்தார்' என்னும் புகழ்ச் சொல்லை ஒன்றன மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களிலும் உள்ளோர் கேட்பர். இது பாத்திரம் அறிந்து பிச்சைஇட வேண்டும் என்று உணர்த்துவதாகும்.

பரிபாடல்
பரிபாடல்
மையோடக் கொவனார் பாட்டு ,
பித்தாமத்தர்இசை,பண்ணுப் பாலை யாழ்
'..திரையிரும் பனிப் பௌவம் செவ்விதா அறமுகந்து
உரவரும் உடன் றார்ப்ப ஊர்ப்பொறை கொள்ளாது
கரையுடை குளமெனக் கழன்றுவான் வயிரழிபு
வரைவரை தொடுத்த வயங்குவெள் ளருவி
இரவிருள் பகலாக இடம் அரிது செலவென்னாது
வலன் இறங்கு முரசில் தென்னவர் உள்ளிய
நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன
பெயலாற் பொலிந்து பெரும்புனல் பல நந்த
நலனந்த நாடணி நந்தப் புலனந்த
வந்தன்று வையைப் புனல் ''
வைகை நீராடச் சென்ற பெண் ,மழையின்வருணனையை, நீரோட்டத்தின் கண் சொல்லிவருவது.
அலையையும் குளிர்ச்சியையும் உடைய கரைய கடலை ,வற்ற முகந்து ,இடி முழங்கத் தன்பாலுள்ள பாரத்தைப் பொறுக்காமல் கரையுடைந்த
குளத்திலுள்ள நீர் சுழல்வதுபோல் ,அப்பாரமானது சுழலும்படி மேகமானது மழையைப் பெய்தது.அதனால் மலைச் சிகரங்களில் அருவி நீர் பெருகிற்று. அங்ஙனம் பெருகிய பெருக்கு வெற்றி முரசையுடைய பாண்டியர்களுடைய போர்ப் படையானது பகைவரது
நாட்டைக் கொள்ளக் கருதிக் கிளர்ந்தது போல வந்தது.அதனால் வையை ஆற்றில் புனல் பெருகி உயிர்களுக்கு நன்மை மிக நஞ்சைகள் அழகு பெறவும் ,புன்செய்கள் விளையவும் வந்தது.

Open Window: நாலடியார் .
Open Window: நாலடியார் .: பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு .........
நாலடியார் .
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு
......நாலடியார் . பழவினை.
பலப் பசுக்களின் கூட்டத்தில் கொண்டுபோய் விட்டாலும்,தான் தாய்ப் பசுவை இனம் கண்டு சேர்வதில் இளங்கன்று வல்லதாகும்.அது போல் முற்பிறவியிற் செய்த பழவினையும்,,அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை உடையதாகும்.
இதனால் அறிவது செய்யும் பாவ புண்ணியங்கள் அந்தப் பிறவியிலேயே கழிந்து விடுவன என்று கருதாது, பின்னும் பல பிறப்பிலும் தொடர்ந்து வரக் கூடியது என்றுணர்ந்து,நல்வினையே செய்ய வேண்டும் .

Open Window: World at ' stalemate positionOur thoughts love t...
Open Window:
World at ' stalemate position
Our thoughts love t...: World at ' stalemate position Our thoughts love to swim in water Our mind aims to go high with delight Where is the axis to be at steady....

Our thoughts love to swim in water
Our mind aims to go high with delight
Where is the axis to be at steady..
Oh, my Lord.! ..........................Good night !.................KOTHAIDHANABALAN
Our thoughts love to swim in water
Our mind aims to go high with delight
Where is the axis to be at steady..
Oh, my Lord.! ..........................Good night !.................KOTHAIDHANABALAN
Art thou pale for weariness
Of climbing heaven and gazing on the earth,
Wandering companionless
Among the stars that have a different birth,
And ever changing, like a joyless eye
That finds no object worth its constancy?
Of climbing heaven and gazing on the earth,
Wandering companionless
Among the stars that have a different birth,
And ever changing, like a joyless eye
That finds no object worth its constancy?
Open Window: சிந்தனைச்செதுக்கல்
Open Window: சிந்தனைச்செதுக்கல்: கடமை,பொறுப்பு முன் நிறுத்தி ,இதன் மீது ஏறிவரும் விருப்பு என்றும் கை இருப்பு! விருப்பு அதன் மீது வைக்கும் கடமையற்ற,பொறுப்பற்ற தேடல் என்றும...
Wednesday, 4 July 2012
புறநானூற்றுச் செய்தி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை
புறநானூற்றுச் செய்தி
மாறோக்கத்து நப்பச்சலையார் ,சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவனை ,பழிப்பது போல் புகழ்ந்து பாடியது.
நஞ்சுடை வாழ் எயிற்று ,ஐந்தலை சுமந்த ,
வேக வெந்திறல் ,நாகம் புக்கெண,
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த ,வெள் வேல்சினங்கெழு தானைச் செம்பியன் மருக,!
கராஅம் கலித்த குண்டுகள் அகழி,
இடம்கருங் குட்டத்து உடன்தொக்கு ஓடி ;
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் ,செம்மல் மூதூர் ,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
;நல்ல என்னாது,சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை !செருவத் தானே!
புறாவின் துயரைப் போக்கிய சிபிச் சக்ரவர்த்தியின் மரபினனே !சினமிகுந்த வேல் தாங்கிய படையை உடையவனே!முதலைகள் நிறைந்த அகழியையும்,இரவு வேளையிலே ,ஊர் காப்பாரின் விளக்கு நிழலைக் கவரும் முதலைகள் திரண்டிருக்கும் நீர் நிறைந்த மடுவினையும்,செம்பாற் செய்தார்போல்
மதிலையுமுடையதும் ,தலைமையோடு விளங்கிய மிகப் பழைய அரண் அங்கே இருந்தது. கச்சணிந்த யானைப் படையுடன் வலி பொருந்திய அரசும் அங்கே இருந்தது.அவற்றை நல்லன என்று பாராது, நச்சுப் பற்களும்,ஐந்தலையும் உடைய நாகம் புக்கது போல் புகுந்து ,வானம் செவ்விருள் பட அவ்வூரை எரியூட்டி
அழித்து, வானத்தும் செந்தீ எழச் செய்தாய். மலைமுழையின் கண்ணே இடிமுழக்கம் எதிர் ஒலித்தாற்போல் அவ்வூரினுள் புகுந்து அதனை அழித்துப் போரிட்டு வெல்லும் வல்லமை உடையவனாயும் இருந்தாய்! பெருந்தகை! நின முன்னோர் அருளும், நின கொடிய வன்மையும் இருந்தவாறு என்னே!

Open Window: சிந்தனைச் செதுக்கல்
Open Window: சிந்தனைச் செதுக்கல்: சிந்தனைச் செதுக்கல் பல கண்கள் காணும் காட்சி ஒன்றாயிருக்கலாம். ஆனால் அவரவர் மனம் அதைக் கண்டு, உணர்த்தும் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கும்...
சிந்தனைச் செதுக்கல்
சிந்தனைச் செதுக்கல்
பல கண்கள் காணும் காட்சி ஒன்றாயிருக்கலாம்.
ஆனால் அவரவர் மனம் அதைக் கண்டு, உணர்த்தும் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
பல கண்கள் காணும் காட்சி ஒன்றாயிருக்கலாம்.
ஆனால் அவரவர் மனம் அதைக் கண்டு, உணர்த்தும் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
Open Window: புறநானூற்றுச் செய்தி. , நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி
Open Window: புறநானூற்றுச் செய்தி. , நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி: புறநானூற்றுச் செய்தி. நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங...
புறநானூற்றுச் செய்தி. , நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி
புறநானூற்றுச் செய்தி.
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி கோட்டையை முற்றுகையிடுகிறான்.நெடுங்கிள்ள ியோ போரிலும் பொருதாது, கோட்டை வாசலையும் திறக்காது அடைத்து வைத்திருக்கும் நிலையை புலவர் கோவூர் கிழார் அவனிடம் இடித்துரைக்கும் பாங்கு.
இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும்,மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉ்க் கேட்பவும்,
இன்னாது அம்ம,ஈங்கு இனிது இருத்தல் ;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் !
'அறவை யாயின், 'நினது ' எனத் திறத்தல் ;
மறவை யாயின் போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே .
'பசி மிகுந்த யானைகள் உணவு பெறாது ,கட்டிய கம்பம் வருந்தச் சாய்ந்து,நிலத்திற் புரண்டு ,இடியேறு போலப் பிளிர்கின்றன. பால் இல்லாதவாய் ,,குழந்தைகள் அழுகின்றன.மகளிர் பூவில்லாது வெறுந்தலையை முடிக்கின்றனர். நல்ல வீட்டிலும் குடிநீர் இன்றி வருந்தி மக்கள் கதறுகின்றனர்.இவையெல்லாம் கேட்டும் நாணங் கொள்ளாது இனிதாக இங்கு நீ இருப்பது மிகவும் தவறானது.நெருங்க முடியாத ஆற்றல் மிகுந்த குதிரைகளை உடைய தலைவனே! நீ
அறத்தை உடையவனாயின்,'இது நின் கோட்டையும் தானே , என்று கூறித் திறந்து விட்டு விடு. அன்றி வீரம் உடையவன் என்றால் ,போர் செய்வதற்காக கதவைத் திறந்து ,எதிர்த்துச் செல் . இரண்டுமே செய்யாது ,மதிற் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருத்தல் வெட்கக்கேடு ஆகும்.
நெடுங்கிள்ளியிடம் சென்ற பிறகு நலங்கிள்ளியைக் காணச் செல்கிறார். அங்கு அவனிடம் அவன் குணம் பொறுத்து எடுத்துரைக்கும் பாங்கு இவ்வண்ணம் செல்கிறது..
இரும்பனை வெண் தோடு மலைந்தோ அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியம் ஆர்மிடைந் தன்டூர்; நின்னோடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ;
ஒருவீர் தோற்பினும் , தோற்பது குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே ; அதனால்
குடிப் பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
நின்னை எதிர்த்து நிற்பவன் பணம்பூச் சூடிய சேரன் அல்லன்;
வேப்பந்தார் அணிந்த பாண்டியனும் அல்லன்;
நின் கண்ணியும் ,நயனுடன் போரிடுவோன் கண்ணியும் ஆத்திப் பூவால் ஆயினவே! ஆகவே ,ஒருவர் தோற்றாலும் தோற்பது நும் சோழர் குடி அல்லவோ ! இருவரும் வெற்றி பெறுவது என்பது இயல்பன்றே. அதனால் நும் செயல் குடிப்பெருமைக்குத் தக்கதன்று. நும் போன்ற வேந்தர்க்கு உடல் பூரிக்கும் அளவு நகையுண்டாக்குவதே நீவீர் இயற்றும் போராகும்.
( ஈண்டு இருவரையும் புலவர் இடித்துரைக்கும் பாங்கு நயம் வியந்து போற்றத் தக்கது .)
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி கோட்டையை முற்றுகையிடுகிறான்.நெடுங்கிள்ள

Subscribe to:
Posts (Atom)