Exchange of our views in any field will provide good ground for our good thinkings and thereto choose a righteous path for us.
Monday, 30 April 2012
Open Window: திருக்குறள்
Open Window: திருக்குறள்: கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. ..... திருக்குறள் சான்றோர்க்கு அழகு என்று சொல்லப் படுவதாவது, அவர்கள் தங்கள்...
திருக்குறள்
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
..... திருக்குறள்
சான்றோர்க்கு அழகு என்று சொல்லப் படுவதாவது, அவர்கள் தங்கள்
மனதில் இவை துன்பம் விளைவிப்பவை, இவை இன்பம் அளிப்பவை என்று பாகுபாடுகள் காணமாட்டார்கள். ஏனெனில் எதுவானாலும் தாங்களே அதற்கு பொறுப்பு என்றுணரும் போது இந்த பேதைமை உணர்வுக்கு அவரிடத்திலே இடமில்லை!

Sunday, 29 April 2012
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் -எல்லாம் இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம் மாணாக் குடிப் பிறந்தார் ...
நாலடியார்
கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் -எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம்
மாணாக் குடிப் பிறந்தார்
... ........... நாலடியார்
என்றும் உயர்குடிப் பிறந்தோரின் பண்பாவது, தான் கல்வியறிவு
இல்லாமல் இருப்பதற்கு அச்சப் படுவார். கீழ்மக்கள் பார்க்கும் தொழிலைச் செய்ய விரும்பார்.
தகாதச் சொற்க்களை வாய் தவறி சொல்லிவிடுவோமோ என்று அஞ்சுவர்.
ஒருவர் கேட்டு அது இல்லை என்று சொல்லக் கூடிய நிலைமை தனக்கு வந்துவிடக்
கூடாது என்று அச்சமுற்று இருப்பார். இத்தகைய மாண்புகள் அற்ற குடியிற் பிறந்தவர் மரம் போல் ஆவர்

Open Window: சிலப்பதிகாரம் ..காடுகான்காதை
Open Window: சிலப்பதிகாரம் ..காடுகான்காதை: வாழ்த்தி வந்திருந்தேன் இதுவென் வரவுஎனத் தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு மாமுறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீஎனக் கோவலற்கு உ...
சிலப்பதிகாரம் ..காடுகான்காதை
வாழ்த்தி வந்திருந்தேன் இதுவென் வரவுஎனத்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமுறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீஎனக் கோவலற்கு உரைக்கும்
கோத்தொழி ளாலரோடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தநலம் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
காலை எய்தினர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூழத் தருநெறி கவர்க்கும்
.............சிலப்பதிகாரம் ..காடுகான்காதை
மறையோன், பாண்டிய நாட்டின் பண்பை அறிந்தவன்
அதலால் கோவலன் ,' வேத முதல்வனே! மதுரைக்குச் செல்லும் வழி பற்றி
கூறுக !' என வேண்டினான். அது கேட்டு ,' அரசியலில் அமைச்சரோடு
மாறுபாடு கொண்டு அரசன் தன போக்கில் செயல்பட ,அதனால் ஆட்சியையே இழந்து
அல்லலுறும் நாடு போல, வேனில் எனும் அமைச்சனுடன் வெவ்விய கதிர்களையுடைய
அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க ,முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு
கெட்டுத்தன்னைச் சார்ந்தாரை நடுங்கச் செய்யும் ; பாலை எனக் கூறப்படும் கொடுந்தன்மையுறும்.
இத்தகைய வேனிர்காலத்தே காரிகையுடன் கடும் பயணத்தை மேற்கொண்டீரே! கற்பாறைகளும்,
சிறுமலைகளும்,மயக்கம் தரும் கானல்நீர் வேலியும் கலந்து கிடக்கும் இந்த நீண்ட பாலை வழியைக்
கடந்து சென்று கொடும்பாளூர் ,நெடுங்குளம் என்னும் இரண்டு ஊர்களுக்கும் பொதுவான
ஏரிக்கரையை அடைந்தால், பிறை சூடிய சிவபெருமானின் முத்தலைச் சூலம் போல கடத்தற்கரிய மூன்று வழிகள் பிரியும்!'
எனக் கூறி மேலும் அவற்றை விரிவாக எடுத்துரைத்தான் அம்மறையோன்.

Wednesday, 25 April 2012
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: கப்பி கடவதாக் கலைத்தன் வாய்ப்பெயினும் குப்பைக் கிளைபோவாக் கோழிபோல் - மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம் புரிந்தவாறே ம...
நாலடியார்
கப்பி கடவதாக் கலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பைக் கிளைபோவாக் கோழிபோல் - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்.
....நாலடியார்
பொடி குருனையரிசியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே
தன வாயில் போட்டிருந்தாலும் கோழியானது குப்பைக் கிளருதலை விட்டு விடாது.
அதுபோல மிகுந்த அறநெறி நூல்களிலிருந்து எப்படித்தான் அருமையான பொருளை விரிவாக
எடுத்து விளக்கிய போதும் கீழான அறிவு கொண்டு கீழானவன் தன் மனம் விரும்பும் வழியில்
முனைந்து செல்வான்.

Open Window: சிந்தனைச்செதுக்கல்
Open Window: சிந்தனைச்செதுக்கல்: ஒரு யோக்கியவானுக்கு, பகைவன் செய்யும் பாதகமான செயல் கூட சாதகமாக திரும்பி நிற்கும். இது ஒரு மறைபொருளான உண்மை. எனவே நாம் நமக்கு ஏற்படுகின்ற ...
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சன்றாமை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன...
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சன்றாமை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன...
நாலடியார்
சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சன்றாமை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து .
......நாலடியார்
ஒரு சிலரை நற்குணம் நிரம்பியோர் என்று நினைத்து அவருடன் சேர்ந்தபின் ,
அத்தகைய குணம் நிரம்பியவர்கள் அவர்கள் அல்லர் என்று ஒருவன் தெளிந்தான் என்றால் ,
அவனது அந்நிலையானது நல்ல சந்தனம் உள்ள செப்பு இது என்று நினைத்து ,
அந்த செப்பைத் திறந்து உள்ளே பார்க்க அதில் பாம்பு கிடப்பதைப் போலாகும்.
ஆராய்ந்து நட்பு கொள்ளுதல் நலமாம்.

Open Window: சிந்தனைச்செதுக்கல்: ஒருவருக்கொருவர் உதவி பெறுவதும் தருவதும் வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே உள்ள ஒன்று. முடிந்தமட்டும் செய்வோம். முடியாதெனில் அதைத் தெளிவுற உரைப்...
சிந்தனைச்செதுக்கல்
ஒருவருக்கொருவர் உதவி பெறுவதும் தருவதும் வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே உள்ள ஒன்று. முடிந்தமட்டும் செய்வோம். முடியாதெனில் அதைத் தெளிவுற உரைப்பதில் தவறில்லை. மாறாக, நம் வாயால் இல்லை என்று மறுப்பானேன் என்ற தவறுதலான நினைப்பில், பார்ப்போம் என்ற தவறான நம்பிக்கையை அவரிடத்தில் விதைத்தல் ஆகாது. இது அவருக்கு கால விரயத்தையும் மன உளைச்சலையுமே தரும். இதற்கு நாம் பொறுப்பாவது நலமல்லவே! ....
கோதைதனபாலன்
கோதைதனபாலன்
Friday, 20 April 2012
Open Window: சிலப்பதிகாரம்
Open Window: சிலப்பதிகாரம்: கடிமலர் களைந்து முடிநா றழுத்தித் தொடிவளைத் தோளும் ஆக்கமும் தோய்ந்து சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றிச் செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கட...
சிலப்பதிகாரம்
கடிமலர் களைந்து முடிநா றழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆக்கமும் தோய்ந்து
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ
ஏரோடு நின்றோர் ஏர்மங் கலமும்
அறிந்து கால் குவித்தோர் அரிகடா உறுத்த
... பெருஞ் செய்ந்நெல்லின் முகவைப் பாட்டும்
தென்கினைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழிசை ஓதையும்
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டாங்கு .
.......... சிலப்பதிகாரம் .... புகார்க் காண்டம்
நாற்று நடும் கழனியில் குவளை முதலிய மலர்களைக் களைஎடுத்து
விட்டு முடி நாற்றை பகிர்ந்து நட்டு,தொடிவளைத் தோளிலும், மார்பிலும்
சேறுபடிந்த கோலத்துடன் அழகுறத் தோன்றி ,சிவந்த கயல் மீன் ஒத்த நீண்ட கண்களையும்
கொச்சைச் சொற்களையும் உடைய கடைசியர் மிகுந்த மயக்கம் தரும் கள்ளை உண்டு
தொலைத்ததால் பாடும் புதிய பாட்டொலியும் எங்கும் கேட்கும்.
ஒளி விளங்கும் நெற்கதிரோடு அருகம் புல்லையும் குவளை மலரையும்
விரவித் தொடுத்த மாலையை மேழியிலே சூட்டி ,நிலத்தைப் பிளப்பவரைப் போல
கடவுளைப் போற்றுவோர் கைகூப்பித் தொழுது நிற்க ,பொன்னேர்ப் பூட்டி நிற்போர் பாடும்
ஏர் மங்கலப் பாட்டின் ஒலியும் கேட்கும்.
நெல்லைப் பிரித்து ஓரிடத்தில் குவித்தோர் ,தாள் போரைப் பிணைபூட்டி
மிதித்தப் பின்னர் ,அந்நெல்லை முகந்து முறைத்தால் தூற்றும்போது
பாடும் முகவைப் பாட்டொலியும் எங்கும் கேட்கும். தெளிந்த ஓசை மிக்க
தடாரினையுடைய கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மார்ச்சனையுடைய
திரண்ட முழவினது மகிழ்ச்சி தரும் இனிய ஒலியும் எங்கும் கேட்கும்.
கிராமியப்பாடல்கள் இவ்வாறு மலர்கின்றன.....!

Thursday, 19 April 2012
Open Window: தண்தமிழ்
Open Window: தண்தமிழ்: தன் மொழி தண்தமிழ் என்றறியார் தன் பிழைப்பிற்கு வேற்றுமொழி நாடுவார் தன் மொழி உயரகற்றதை உள்வாங்கார் தன் மொழி வளரபிறிது கற்கக்குறையாமோ ......
தண்தமிழ்
தன் மொழி தண்தமிழ் என்றறியார்
தன் பிழைப்பிற்கு வேற்றுமொழி நாடுவார்
தன் மொழி உயரகற்றதை உள்வாங்கார்
தன் மொழி வளரபிறிது கற்கக்குறையாமோ
தன் பிழைப்பிற்கு வேற்றுமொழி நாடுவார்
தன் மொழி உயரகற்றதை உள்வாங்கார்
தன் மொழி வளரபிறிது கற்கக்குறையாமோ
.... கோதைதனபாலன்
Wednesday, 18 April 2012
Open Window: நான்மணிக்கடிகை
Open Window: நான்மணிக்கடிகை: திருவின் திரல் உடைய இல்லை - ஒருவர்க்குக் கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும் இன்மையின் இன்னாத இல்லை இலம் என்னும் வன்மையின் வன்பாட்ட ...
நான்மணிக்கடிகை
திருவின் திரல் உடைய இல்லை - ஒருவர்க்குக்
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும்
இன்மையின் இன்னாத இல்லை இலம் என்னும்
வன்மையின் வன்பாட்ட இல்.
.......நான்மணிக்கடிகை
செல்வத்தைப் போல வலிமையுடையது பிறிதில்லை.
கற்கும் கல்வி போல ஒருவனுக்கு உற்ற துணை வேறு எதுவும் இல்லை.
எல்லாவற்றுள்ளும் வறுமையைப் போலத் துன்பம் எதுவுமில்லை.
அந்த வறியவர் தமக்கு இல்லை என்ற சொல் சொல்லாத மனவளத்தைப் போல் வளமையான ஒன்று எதுவுமில்லை.
Tuesday, 17 April 2012
Open Window: சிலப்பதிகாரம்
Open Window: சிலப்பதிகாரம்: கைத்தாயும் அல்லை கணவருக்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக் கடலோடு காவிரி சென்றலைக்கும் முன்றில் மடலவிழ் நெய்தலங் க...
சிலப்பதிகாரம்
கைத்தாயும் அல்லை கணவருக்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலோடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானல் தடம் உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரோடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பார் யாமொருநாள்
ஆடுதும் என்ற அணியிழைக்குஅவ் வாயிழையாள்
பீடன்று எனவிருந்த பின்னரே நீடிய ..
...... புகார்க் காண்டம் , கனாத் திறம் உரைத்த காதை
கனாத் திறம் கேட்ட தேவந்தி கண்ணகியை நோக்கி ,'பொன்னாலான வளையலை அணிந்தவளே! நீ அவனால் வெறுக்கப் படவில்லை.முற்பிறப்பில் கணவன் பொருட்டு செய்ய வேண்டிய நோன்பைத் தவற விட்டிருக்கிறாய் அதனால் ஏற்பட்ட தீங்கு மறைய,
காவிரி தன் நீரையெல்லாம் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அழைக்கும் புகாருக்கு அருகே தழை மலர் மனம் பரப்பும் நெய்தல் நிலத்தில் உள்ள சோலையிலே சோமகுண்டம்,சூர்யா குண்டம் எனும் இரு பொய்கைகள் உள்ளன. அத்துறைகளில் மூழ்கி எழுந்து காமவேள் கோட்டம் சென்று காமவேளை வணங்கும் மகளிர் இம்மையில் தன கணவருடன் கூடி இணை பிரியாது வாழ்வார்.
மறுமையிலும் போக பூமியில் தேவராய்ப் பிறந்து பிரியாது இன்பம் நுகர்வர். எனவே நாமும் அங்கு அவ்வாறு நீராடச் செல்வோம் வா' என்கிறாள்.
அது கேட்ட கண்ணகி .' அங்ஙனம் துறை மூழ்கித் தொழுதல் எங்கள் இயல்பன்று!' என்று மறுத்து விடுகிறாள்.
[இதனைத் தீர்த்த மூடம்,தெய்வ மூடம் என விலக்கும் சமணம்]
இவ்வரிகள் கண்ணகி தன் துயர் காலத்தும் துறவாக் கொள்கை கொண்டதை விளக்குவன.
Saturday, 14 April 2012
Open Window: சிந்தனை செதுக்கல்
Open Window: சிந்தனை செதுக்கல்: கஷ்டங்களை, ஒரு போர் செய்யும் குணத்தோடு அணுகினாலே ஒரு படி தாண்டிவிட்டோம் என்றாகும். மாறாக அதைப் பெரும் கஷ்டமாகவே நினைத்தால் அந்த நினைப்பே நம்...
Open Window: திரிகடுகம்
Open Window: திரிகடுகம்: தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதவன் கோளாளன் என்பான் மறவாதவன் , இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது ......
திரிகடுகம்
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதவன்
கோளாளன் என்பான் மறவாதவன் , இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது
.......திரிகடுகம்
முயற்சியுடைய ஒருவன் என்றும் வாளாவிருந்து பிறரிடத்தில்
கடன்பட்டுப் போகும் நிலையை அடைய மாட்டான்.
உதவும் தன்மையுடைய
உதவும் தன்மையுடைய
ஒருவன் தன் வீட்டில் விருந்தினர் பசித்து இருக்க தான் புசிக்க மாட்டான்.
கொள்கையுடையன் என்ற பெயர் எடுத்தவன் நல்ல சங்கதிகள் எதையும்
மறக்கமாட்டான். இத்தகைய மூவரையும் ஒருவன் தன் நட்பாய் பெற்றிருந்தானால்
அவன் வாழ்வில்
அவன் வாழ்வில்
இன்பமே விளங்கும்.
Wednesday, 11 April 2012
Open Window: சிந்தனைச் செதுக்கல்
Open Window: சிந்தனைச் செதுக்கல்: புரிபவன், புரியக்கூடியவன், புரியும் ஆர்வம் உள்ளவர் ஆக யாரிடமும் நின்று பேசலாம்.... மற்ற தகையுடையவரிடம் பேசினால் மனமும் கெடும், நேரமும் விரயம...
நாலடியார்
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைத்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
...........நாலடியார்
அருவிகள் மாலையானது போன்று அமையப் பெற்ற குளிர்ந்த மலைகளையுடையவனே ! அறிவில்லாதவனோடு எதையும் சொல்ல வேண்டாம். அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டு பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையினின்று தப்பித்து நீங்குதல் நன்று.

Open Window: நாலடியார்: மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று. ........... ...
நாலடியார்
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
........... நாலடியார்
தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும், சிறிதும் மதியாது அவமதிப்பாரும் அவமதிக்கட்டும்..அற்ப ஈயும் நம்மை மிதித்து தலை மீதேறி அம ரும் நிலை உணர்ந்து
சான்றோர் தம்மை அவமதிப்பவர் மீது சினம் ஏற்படக் காரணம் இருந்தும் சினம்
கொள்ளாது இருப்பதே நல்லதென்று அதைத் தவிர்ப்பார்.
Tuesday, 10 April 2012
Open Window: .நாலடியார்
Open Window: .நாலடியார்: விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று உட்கும் அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை யுடையார் செறின் . ......நாலடிய...
.நாலடியார்
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்று உட்கும்
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
......நாலடியார்
படம் விரித்தாடும் நாகப்பாம்பும் நிலத்தின் வெடிப்புக்குள்ளே மறைந்திருக்கும் போது தூரத்து இடி முழக்கம் கேட்டு அஞ்சுறும்.அது போல் என்னதான், எப்படித்தானும் பாதுகாவலுடன் தவறு செய்தவர் இருப்பினும் அவர்கள் மேன்மை மிக்கப் பெரியவர்கள் சினம் கொள்வார்களானால் தப்பிப் பிழைக்கமாட்டார்.
Subscribe to:
Posts (Atom)