Sunday, 25 March 2012

Open Window: நாலடியார்...

Open Window: நாலடியார்...: மெய்ஞானம் கோட்டி உறல்வழி விட்டாங்கோர் அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க் கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரரிவாளர்முன் சொன்ஞானம் சோர விடல்...

நாலடியார்...

மெய்ஞானம் கோட்டி உறல்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரரிவாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்



... ................நாலடியார்... அவையறிதல்


ஞான நூல்களை அறிந்தவர்கள் அவையில் யாவரும் ஒன்று சேர்ந்து தெரிந்து
கொள்ளுதலே முறை.ஆங்கே ஓர் அறிவற்றப் பேச்சு திருகித் திருகி ,அது நிலைப்படுத்தும்
வகையில் ஒருவனால் பேசப்படுமானால் அவன் முன்னிலையில் நமது அறிவு சார்ந்த சொற்கள் சொல்லுதலைக் கைவிட வேண்டும்

Saturday, 24 March 2012

Open Window: நாலடியார்

Open Window: நாலடியார்: இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன- குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு ஒன்றா உணரற்பாற் றன்று .........

நாலடியார்

இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன- குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று


................நாலடியார்........குடிப்பிறப்பு

பெரியோர் வரக்கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும்,
சற்று எதிர் சென்று மகிழ்வுடன் வரவேற்றலும், மற்ற உபசரிப்புகள் முடித்து
பிரியும்போது சற்றுப் பின் செல்லலும், அவர் விடை தந்த பிறகே திரும்பி
வருதலும் ஆன இகுணங்களை உயர் குடி பிறந்த மக்களே அழியாத ஒழுக்கங்களாக கடைப் பிடிப்பார்.
கீழ் மக்களிடம் இவ்வாறு ஒன்றாவது வழுவாது போற்றப்பெறும் என்று சொல்வதற்கில்லை
 
   · ·

Tuesday, 20 March 2012

Open Window: நாலடியார்

Open Window: நாலடியார்: உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார் இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று ...

நாலடியார்

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று

.........நாலடியார்

பசியில் மிகவே வாடினாலும் சிங்கமானது அருகம்புல்லைக் கடிக்காது. அதுபோலவே போடும் உடைகிழிந்து, உடல் உருக்குலைந்து
வறுமையில் வாடியபோதும் உயர்குடியில் பிறந்தவர்கள் தமக்குரிய
ஒழுக்கங்களினின்று சிறிதும் குறையமாட்டார்கள்
.

Monday, 19 March 2012

சிந்தனை செதுக்கல்

மூலப்பொருள் மறைந்தாலும் கருப்பொருள் அழியாது
உறுபொருள் மாறினாலும் ஏறும்பொருள் நனிமிகவே
போற்றும் சொல்லும் பொருளும் பலவாகப்பயின்று
அழகுற நடைபோடும் செந்தமிழே வாழியநீ !

கோதைதனபாலன் 

சிலப்பதிகாரம்


இந்திர விழாவெடுத்த காதையில் வேறு வேறு கடவுளரைக் கண்டோம்.அதனை அடுத்து வருவது,
 

அறவோர் பள்ளியும் அறணோம் படையும்
புறநிலைக் கோட்டத்து புண்ணியத் தனமும்
திறவோர் உரைக்குஞ் செயல்திறந் தொருபால்
...
கொடித்தேர் வேந்தனோடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந் தொருபால்
கண்ணு லாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடர் பாணரோடு
எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால்
 முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ........................

 அருகர்,புத்தர் நடத்தும் அறவோர் பள்ளிகளிலும், அறத்தை போற்றும் அறசாலைகளிலும்,
மதில் புறத்தே உள்ள புண்ணிய இடங்களில் அறத்தின் கூறுபாடுகள் உணர்ந்து ஆறாம் போதிக்கும் செயல்
ஒரு பக்கம் நிறைவேறுகிறது,
கொடியுடன் கூடிய சோழ வேந்தனோடு மாறுபட்டு போரில் தோற்ற அரசர்களது கைவிலங்குகள் அகற்றப்பட்டன..
விடுதலை அருள் சிறந்தோங்கி ஒரு பக்கம் தெரிகிறது.
கொப்த்தரும்,தோற்கருவியாளரும், யாழிசைப் புலவரும், வாய்ப்பாடகரான பாணர் ஆகிய இவர்களது எண்ணற்ற இசைகள்
ஒரு பக்கம் சிறந்து விளங்கின.
இரவு பகல் ஓயாது முழவுகள் முழங்கின. குறுந்தெருக்களும் , நெடுஞ்சாலைகளும் இந்திர விழாவின் களிப்பில் மூழ்கித் திளைத்தன.

[ அரசர்கள் விடுதலை, சமணர்கள், புத்தர்கள் அறம் செய்யும்
பள்ளிகள், மதிலுக்கு வெளியே புண்ணிய இடங்களில் அறம் போதித்தல் கவனிக்கத் தக்கது.]


Wednesday, 14 March 2012

Open Window: நாலடியார்

Open Window: நாலடியார்: நாலடியார் அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால- நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித...

நாலடியார்

நாலடியார்


அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால- நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்ததூ லார்.

அவமதிப்பாயினும்,பாராட்டுரையாயினும் இரண்டையும்
ஓன்றே போல் பாவிப்பர் பெரியோர். ஒழுக்கம் இல்லா
கீழ்மக்களது பழிப்புரையு்ம் சரி, பாராட்டுரையும் சரி,
...
-பெரியோர் மதிக்கமாட்டார்கள். சான்றோர்கள் ஏற்புடைய
காரியம் செயின் உள்ளம் மகிழ்வர் அன்றி பொருந்தாத
காரியம் செயின் மதியாது வி்ட்டுவிடுவர். எனவே பெரியோரை
சிறியோர் மதித்து நடந்து கொள்ளுதல் சாலவும் நன்று

 கோதைதனபாலன்

Open Window: சிலப்பதிகாரம்

Open Window: சிலப்பதிகாரம்: சிலப்பதிகாரம் ....தண்ணீர் தெளித்துத் தன்கைால் தடவிக் குமரி வாழையின் குருத்துஅகம் விரித்தீங்கு அமுதம் உண்க அடிகள் ஈங்குஎன ... அரசர் பின...

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்


....தண்ணீர் தெளித்துத் தன்கைால் தடவிக்
குமரி வாழையின் குருத்துஅகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்குஎன
... அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்
உரிய எல்லாம் ஒருமுறை கழித்தாங்கு
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமுது உண்ணும் நம்பிஈங்குப்
...
பல்வளைத் தோளியும் பண்டுநம் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை....

இது கொலைக்கள காதையில் வருவது. கண்ணகி
இடும் உணவினை கோவலன் உண்ணும் பாங்கினை
மனம் மகிழக் கண்டு அடைக்கலம் ஈந்த மாதரிஅவள்
தன் குலக்கடவுளான கண்ண பெருமானோடு ஒப்பிடுதல்
திவ்யபிரபந்த காலங்கள் முன்னரே திருமால் தெய்வம்
நம்மிடை எவ்வளவு அழகுற இடம் பெற்றிருந்தது
என்பது உணரப்படுகிறது
.



கோதைதனபாலன்
  · ·

Sunday, 11 March 2012

Open Window: நாண்மணிக்கடிகை

Open Window: நாண்மணிக்கடிகை: கள்ளாமை வேண்டும்  கடிய வருதலால்  தள்ளாமை  வேண்டும் தகுதி உடையன நள்ளாமை வேண்டும் சிறியரோடு, யார்மாட்டும்  கொள்ளாமை  வேண்டும்  பகை .........

நாண்மணிக்கடிகை

கள்ளாமை வேண்டும்  கடிய வருதலால் 
தள்ளாமை  வேண்டும் தகுதி உடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு, யார்மாட்டும் 
கொள்ளாமை  வேண்டும்  பகை

....... விளம்பி நாகனார்

நமக்கு உரிமையில்லாத பிறர்பொருளை எந்தவிதத்திலும் ஏமாற்றி பின்னர் அடைந்து கொள்ளுதல்  பெரும் துன்பத்தை தருமாதலால் அதை களவு செய்து கொள்ளும் எண்ணம் கூடாது.

கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங் களிலிருந்து நாம் 

வழுவாதிருக்க வேண்டும்.

பொருந்தாத குணங்களையுடைய கீழ்நிலை மக்களிடம் நட்பு பாராட்டியிருத்தல் கூடாது.

எந்த வகையினராயினும் அவர்களிடம் பகை பாராட்டுதல் கூடாது.


கோதைதனபாலன் 




 

Wednesday, 7 March 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும் நுண்ணூல் பெருங்கேள்வி நூல்கரை கண்டாலும் மைந்நீர்மை இன்றி மயல்அறுபபான் இம்மூவர் மெய்நீர்மை மேல்...

திரிகடுகம்

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூல் பெருங்கேள்வி நூல்கரை கண்டாலும்
மைந்நீர்மை இன்றி  மயல்அறுபபான் இம்மூவர்
மெய்நீர்மை மேல்நிற் பவர்.



........நல்லாதனார்.


கடல் அலை போலன்றி, ஆழ்கடல் போன்று ஆரப்பரிக்காத அமைதியான
அறிவுடையவனும்,
 நுட்பமான சிந்தனையோடும், மிகுந்த கேள்வியறிவோடும் நூல்களில்
தெரிவிக்கப்பட்ட முடிவுகளைத் தெளிவுற தெரிந்தெடுப்பவனும்,
குற்றமாக கருதப்படும் இயல்புகள் இல்லாது மதிமயக்கம் கொள்ள
வைக்கக்கூடிய ஆசைகளைத் தவிர்த்தவன்  ...ஆகிய இமமூவருமே
உண்மை வழி நின்று வாழ்வில் என்றும் நிலைத்திருப்பவர்கள்.




கோதைதனபாலன்.


Thursday, 1 March 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: பழமையை நோக்கி அளித்தல், கிழமையால் கேளிர் உவப்பத் தழுவுதல்- கேளிராய்த் துன்னிய சொல்லால் இனந்திரட்டல் இமமூன்றும் மன்னர்க்கு இளையான் தொழில் ...

திரிகடுகம்

பழமையை நோக்கி அளித்தல், கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல்- கேளிராய்த்
துன்னிய சொல்லால் இனந்திரட்டல் இமமூன்றும்
மன்னர்க்கு இளையான் தொழில்


......நல்லாதனார்


நெடுங்கால நட்பை பாராட்டி
  நண்பர்களை  போற்றி வருதலும்,
தன சுற்றத்தினரிடம் உரிமை
பாராட்டி உறவு போற்றி வருதலும்,
இனிமையான சொற்களால் மேன்மைமிகு சான்றோர்களின் உறவை வளர்த்துக் கொள்ளுதலும் ஆகிய இம்மூன்றும் இளைய தலை முறையினரான வாலிப வயதினர் மேற்கொள்ளக் கூடிய செயல்களாகும்.

கோதைதனபாலன்