Wednesday, 8 February 2012

திரிகடுகம்




பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும்,பேணார்
திறன்வேறு கூறில் பொறையும்,அறவினையைக்
காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.



திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார். உடலுக்கு நல்ல மருத்துவம் தருவது சுக்கு,மிளகு, திப்பிலி என்பவை.இது போன்று வாழ்வுக்கு மூன்று நெறிகளை ஒவ்வொரு பாடலிலும் காண்பதால் இதற்கு இந்த பெயர். பதிணென்கீழ்கணக்கு நூல் வகையில் இது அடங்கும்.



 பிறர் தம்மை புகழ்ந்து பேசும்போது வெட்கப்படுதல் பண்பும்,  தம்மை இழிவாக எவ்வளவுதான் மாறு பட்டு விமரிசிக்கும் போதும் நிதானம் தவறாது பொறுமை கடைப்பிடிக்கும் பண்பும்,  கார் மேகம் தரும் மழை போன்று கைம்மாறு கருதாது அறச் செயல்களை செய்யும் பண்பும் ஆகிய இம்மூன்றும் வாழ்வில் மேன்மை காண்பவர் செயல்களாம்.







 கோதைதனபாலன்


No comments:

Post a Comment