Wednesday, 29 February 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றீக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றுஞ் செல்வம் உடைக்கும் ...

திரிகடுகம்

தன்னை வியந்து தருக்கலும்,  தாழ்வின்றீக்
கொன்னே வெகுளி  பெருக்கலும் -  முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வம் உடைக்கும் படை.


............நல்லாதனார்


தன் பெருமையை தானே வியந்து,புகழ்ந்து பேசித்திரிபவன் , 
தன் கோபங்களை அடக்கி வாசிக்காது வெளிக்காட்டி  திரிபவன் ,
எந்தப்பொருள் எத்தகையதாயினும் விருப்பமிகுதியால் தானேஅடைந்துஅனுபவிக்க விழைபவன் ஆக இவர்கள் இந்த தங்களது மூன்று  செயல்பாடுகளினாலேயே  தங்கள்  செல்வத்தை அழித்துக் கொள்வர். 




கோதைதனபாலன் .

Monday, 27 February 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: திரிகடுகம் நன்றிப் பயன்தூக்கா நாணிலியும், சான்றோர்முன் மன்றில் கொடும்பா உரைப்பானும் ,-நன்றின்றி வைத்த அடைக்கலம் கொள்வானும் இம்மூ...

திரிகடுகம்

திரிகடுகம்


நன்றிப்     பயன்தூக்கா  நாணிலியும், சான்றோர்முன் 
மன்றில் கொடும்பா  உரைப்பானும் ,-நன்றின்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.



.......நல்லாதனார்



ஒருவர் செய்த உதவியை நினைத்து பார்க்காதவனும்,
பெரியோர் இருக்கும் சபையில் மதியாது கடும்சொற்கள் சொல்பவனும்,

தன்னிடம் பாதுகாக்க தரப்பட்ட பொருள் மீது ஆசை கொண்டு கைப்பற்றி இருப்பவனும் 
தாங்கள் அடைந்திருந்த புகழ் அனைத்தையும் 
இழப்பவராவர்.




கோதைதனபாலன்.


அனுபவ முத்திரைகள்: எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இச...

அனுபவ முத்திரைகள்: எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இச...: இன்று ஜானகி அன்று ஜானகி எஸ்.ஜானகி அம்மாவின் தமிழ் திரை பாடல் காலம் ஒரு வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்ட ஒரு நீண்ட அழகுற அமைந்...

Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: சிந்தனை செதுக்கல்: கல்வியாவது ஒரு துணை கோடல் பண்பாவது ஒரு பற்றுக்கோல் அனுபவமாவது விதி வழி உரைத்தல் அறிவாவது தன் வழி தேடல் வாழ்க்கையாவது நாம் போகும் பாதை ம...

சிந்தனை செதுக்கல்

கல்வியாவது ஒரு துணை கோடல்
பண்பாவது ஒரு பற்றுக்கோல்
அனுபவமாவது விதி வழி உரைத்தல்
அறிவாவது தன் வழி தேடல்
வாழ்க்கையாவது நாம் போகும் பாதை
மரணமாவது திருப்புமுனை அறியாதது ....





கோதைதனபாலன் 

Sunday, 26 February 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: திரிகடுகம் அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்பு...

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: திரிகடுகம் அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்பு...

திரிகடுகம்

திரிகடுகம்
                                                                     
அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலில் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றம் தரூஉம் பகை.
...


.........நல்லாதனார்

எல்லோரையும் பிணைத்திருக்கும் அன்பு என்ற கட்டிலிருந்து ஒருவன் விலகியிருப்பதும்,

வாழ்க்கையில் கற்றறியும் கல்வியை ஒருவன் பொருள் மேல் உள்ள ஆசையால் கற்காது விடுதலும்,

நட்பு தரும் அரிய பண்பினை மதியாது ஒதுக்குதலும்
ஆகிய இந்த மூன்று நிலைகளே அவனுக்கு பகைமைகளை எளிதில் சேர்க்கும்.



கோதைதனபாலன்

Tuesday, 21 February 2012

Open Window: நான்மணிக்கடிகை

Open Window: நான்மணிக்கடிகை: புகைவித்தாப் பொங்குஅழல் தோன்றும் சிறந்த நகைவித்தாத் தோன்றும் உவகை - பகைஒருவன் முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின் இன்னாவித் தா...

நான்மணிக்கடிகை

 புகைவித்தாப் பொங்குஅழல் தோன்றும்  சிறந்த
 நகைவித்தாத்  தோன்றும் உவகை -  பகைஒருவன்
முன்னம்வித் தாக முளைக்கும்   முளைத்தபின்
இன்னாவித் தாகி விடும்.


........விளம்பிநாகனார்


கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கு ,  அதன் புகை அதற்கான விதையாக அமையும்;    மலர்ச்சி கொண்ட முகமே உள்ளத்தில் புரளும் மகிழ்ச்சிக்கு விதையாக அமையும் ;  ஒருவனுக்கு ஏற்படும் பகையானது முன்பு செய்த அவனது பாவசெயலுககான விதையாக மாறும்.  அவ்விதம் மாறி முளைத்து   பெருகி வருமானால்   எந்நாளும்  சேர்ந்துவிடக் கூடிய  துன்பங்களின் வித்துக்களாக மாறிவிடும்.



கோதைதனபாலன்.

Sunday, 19 February 2012

Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: சிந்தனை செதுக்கல்: அறிவு, நல்லபுத்தி, போதுமானதைரியம் இவை நம் மனசாட்சியை இயக்கி வேலைசெய்ய போதுமானது. . அறிவு, வசமில்லா புத்தி , தைரியக்குறைவு நல்ல வழிக...

சிந்தனை செதுக்கல்



 அறிவு, நல்லபுத்தி, போதுமானதைரியம் இவை நம் மனசாட்சியை இயக்கி வேலைசெய்ய போதுமானது.

.
அறிவு, வசமில்லா புத்தி , தைரியக்குறைவு நல்ல வழிக்கு இறையாண்மையை தேடும்

பாமரத்தனம் ,தைரியம்   நல்ல வழி காண தான் பிடித்த பற்றுகோலை அது மதமானாலும் சரி ,எந்த ஒரு கோட்பாடானாலும் சரி  அதை நம்பியே செயல்பட வைக்கும்.


பாமரத்தனமும்,  தைரியக்குறைவும் அறிவை செயலிழக்க வைத்து நல்ல வழி தேடுதலில் தடுமாறியே நிற்கும். யாரையாவது நிலையில்லாது நம்பியே காலத்தை வீணடிக்கும்.

அறிவு, தைரியம் இரண்டும் இருந்து நல்ல புத்தி இல்லாவிடில்
 மற்றையோருக்கு இடைஞ்சல் கொடுத்தே செல்லும்.



கோதைதனபாலன்

Saturday, 18 February 2012

அரசாங்கம்

  மின் வெட்டு....இன்று எங்கும் பரபரப்பாயும்,கேலியாகப் பேசிக்கொள்ளும் பேச்சாகிவிட்டிருக்கிறது. தற்காலிகமான சூழ்நிலையானால் சரி. ஆனால் நிரந்தரமாகிவிடுமோ என்ற சந்தேகம் வரும் பொழுது 
யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதற்க்கு அரசு தரப்பில் சரியான விளக்கங்கள் வெளிவிடப் படாத நிலையில் 
பல அனுமானங்கள் உருவாவது இயற்கையே. அவை உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அது பற்றி தன நிலைப்பாடை சொல்லி மாற்று நடவடிக்கை என்ன 
என்று சொல்வதுதான்  அரசு நீதி. சென்னையில் மட்டும் மற்ற மாவட்டத்தை போலல்லாது   மின் வசதி நன்கு இருந்தால் ,சொல்லக் கூடிய காரணங்கள் இருந்தால் வெளிப்படுத்தலாம். பதிலாக மற்றைய மாவட்டங்களுக்கு மின் வெட்டு முறையை ஒரு ஒழுங்குடன் செயல் படுத்துவதோடல்லாமல் ,  கட்டண  விகிதத்தை வெட்டுக்கு தகுந்தாற்போல்
குறைப்பதுதானே முறை. அத்தோடு  மெழுகுவர்த்தியையும் ரேஷன் கடையில் பாகுபாடு இல்லாமல் சப்ளை செய்யலாம். இல்லாவிட்டால் ,சீமதண்ணீர் கிடைக்காத நிலையில் இதையும் விலை ஏற்றிவிடுவார். அரசு தேர்வு எழுதும் அனைத்து பிள்ளைகளுக்கும் சலுகை  மதிப்பெண்கள் வழங்கலாம்.
இவை சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கே செய்யலாம். 


வேறு என்ன சமாதானத்தை எதிர் பார்க்க முடியும்.








கோதைதனபாலன் 

Saturday, 11 February 2012

Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: சிந்தனை செதுக்கல்: நம்மை சுற்றிலும் உள்ள இயற்கையில் பாடங்கள் படிக்க ஏராளம். அண்டசராசங்களின் தவறாத ஒழுங்கு முறையான செயல்பாடுகள், தாவர இனங்கள் தங்கள் இடமறிந்து வ...

சிந்தனை செதுக்கல்

நம்மை சுற்றிலும் உள்ள இயற்கையில் பாடங்கள் படிக்க ஏராளம். அண்டசராசங்களின் தவறாத ஒழுங்கு முறையான செயல்பாடுகள், தாவர இனங்கள் தங்கள் இடமறிந்து வாழும் முறைமை, பறவையினத்து காணப்படும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய செயல்பாடு, ஊர்வன அவ்வப்போழ்து பூமியின் இயல்புகளை அறிந்து 
செயல்படும் தன்மை,வன விலங்குகளிடம் இருக்கும் மன உறுதி, நீர்வாழ் இனத்திடம் காணப்படும் ஆனந்த போக்கு இவற்றை இயற்கையின் மறு அங்கமாகிய நாம் சரியாக உணர்ந்து ,ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தும் கொள்கை தவிர்த்து ஆறாவது அறிவை ஆக்கப்பூர்வமாக்கி வாழ்ந்தால் வாழ்வில் நமக்கு சுவை இருக்கும். 



கோதைதனபாலன். 

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்;செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை; - எய்தப் பலநாடி நல்லவை கற்றல்; இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள்....

திரிகடுகம்

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்;செருவாய்ப்பச் 
செய்தவை நாடாச் சிறப்புடைமை; - எய்தப்
பலநாடி நல்லவை கற்றல்; இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.


.... நல்லாதனார். 

நமக்கு வருகின்ற வருவாயில் கால் பங்களவு எடுத்து அறம் சார்ந்த செய்து வருதல் வேண்டும்.
தம்மைக் காக்கும் போரின் வெற்றி கண்டவிடத்து தமது பங்கு எந்த அளவில் இருந்தாலும் அதற்கான பிரதி பலன் எதிர் பாராது இருத்தல்.
பல நல்ல நூல்வழியோ,கேள்வி ஞானமாகவோ, அனுபவ விளக்கங்களாக பற்பல அறிந்திட்ட சங்கதிகள் ஆராய்ந்து நல்லவற்றை தெரிந்தெடுத்து அதன் வழி நிற்றல். 




இம்மூன்று கொள்கைகளும் நலம் மீது நாட்டம் கொண்டு இயங்கும் நல்ல மனிதர்கள் கடைப்பிடிப்பதாவது. 





கோதைதனபாலன். 



Thursday, 9 February 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: குறளையுள் நட்புஅளவு தோன்றும் ; உறல்இனிய சால்பினில் தோன்றும் குடிமையும்; பால்போலும் தூய்மையில் தோன்றும் பிரமாணம், இம்மூன்றும் வாய்மை உடை...

திரிகடுகம்

குறளையுள் நட்புஅளவு தோன்றும் ; உறல்இனிய 
சால்பினில் தோன்றும் குடிமையும்;   பால்போலும் 
தூய்மையில் தோன்றும் பிரமாணம், இம்மூன்றும் 
வாய்மை உடையார் வழக்கு.


...நல்லாதனார். 


நாம் துன்பப் படும் போது ,நமக்கு துணை நின்ற நட்பின் தன்மை திண்மையுள்ளது ;
நட்பானவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் பண்பானது அவர்தம் பிறந்த குடிப்பிறப்பை சொல்லும்.
கலப்படமில்லாத பாலின் வெண்மை நிறமொத்த நண்பர்களின் உண்மைமொழிகள் அவர்தம் தரத்தினை உள்ளபடி செப்பும்.   இந்த மூன்று நிலைகளுமே உண்மைக்கும் மேலான வாய்மையுடையவர்கள் கடைப் பிடிக்கும் வழக்குகளாகும். 




கோதைதனபாலன் 










Wednesday, 8 February 2012

Open Window: திரிகடுகம்

Open Window: திரிகடுகம்: பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும்,பேணார் திறன்வேறு கூறில் பொறையும்,அறவினையைக் காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. ...

திரிகடுகம்




பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும்,பேணார்
திறன்வேறு கூறில் பொறையும்,அறவினையைக்
காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.



திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார். உடலுக்கு நல்ல மருத்துவம் தருவது சுக்கு,மிளகு, திப்பிலி என்பவை.இது போன்று வாழ்வுக்கு மூன்று நெறிகளை ஒவ்வொரு பாடலிலும் காண்பதால் இதற்கு இந்த பெயர். பதிணென்கீழ்கணக்கு நூல் வகையில் இது அடங்கும்.



 பிறர் தம்மை புகழ்ந்து பேசும்போது வெட்கப்படுதல் பண்பும்,  தம்மை இழிவாக எவ்வளவுதான் மாறு பட்டு விமரிசிக்கும் போதும் நிதானம் தவறாது பொறுமை கடைப்பிடிக்கும் பண்பும்,  கார் மேகம் தரும் மழை போன்று கைம்மாறு கருதாது அறச் செயல்களை செய்யும் பண்பும் ஆகிய இம்மூன்றும் வாழ்வில் மேன்மை காண்பவர் செயல்களாம்.







 கோதைதனபாலன்


Thursday, 2 February 2012

NAAN MANIK KADIKAI

Get afraid, to what have to got afraid.
Render helps to others and not for incomplete.
Do favour the justice that comes from true heart.
Ignore the offered, whatever the kinds may be, for injustice.
No considerations over what to be safeguarded.
These are the principles that gentle people follow
.


அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த

எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்

கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி

நட்டார்கண் விட்ட வினை. ..... ..27


This Tamil version comes under 'Pathinen keezhkanakku' as Nanmanik kadikai poem.

Vilambinaganar was the poet who wrote this.  He belonged to A.D.750.



நாம் எந்த இடத்தில் பயந்து இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் பயந்து இருக்க வேண்டும்.மற்றையவர்கட்கு செய்யப்படும் உதவியானது குறை பாடில்லாமல் இருக்கவேண்டும். சொல்லப்படும் நியாயமானது மனமறிந்து சொல்லப்பட்டிருக்க வேண்டும்.அடைக்கலமாக நம்மிடம் சேர்ந்துவிட்ட ஒன்றின்மீது சந்தேகம் கொண்டு ஆராயும் முறைமை ஆகாது. இவை யாவும் சான்றோர் கொள்ளும் வழிமுறைகளாம்..
                                 

kothaidhanabalan.