Exchange of our views in any field will provide good ground for our good thinkings and thereto choose a righteous path for us.
Thursday, 23 August 2012
Open Window: முக்கூடற் பள்ளு
Open Window: முக்கூடற் பள்ளு: முக்கூடற் பள்ளு தொன்மைத் தமிழில் மென்மையுறு சொற்களுக்குரிய மேன்மை நடையில் உள்ளத்தைக் கொள்ளையிடும் அருமைக்குரியது இந்த முக்கூடற்பள்ளு.இ...
முக்கூடற் பள்ளு
முக்கூடற் பள்ளு
தொன்மைத் தமிழில் மென்மையுறு சொற்களுக்குரிய மேன்மை நடையில் உள்ளத்தைக் கொள்ளையிடும் அருமைக்குரியது இந்த முக்கூடற்பள்ளு.இவற்றில் பலவும் பந்துவராளி, பைரவி, சங்கராபரணம் ,சுருட்டி ,கல்யாணி,காம்போதி, ஆனந்த பைரவி,புன்னகவராளி ஆகிய ராகங்கள் அமைய , ஆதி தாளம், அட தாளம், ரூபக தாளம் போன்றவை பொருந்தச் செவிக்கு விருந்தாகவும் பாடப் பெற்ற பெருமைக்குரியவையாகும்.
தன் நாட்டின் பெருமை பேசும் ஒரு பாடல்.
காயக் கண்டது சூரியகாந்தி
கலங்கக் கண்டது வெந்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தானம்
சீவல மங்கைத் தென்கரை நாடே
பொருள் விளக்கம்.
வெயில் காயுமே தவிர மக்கள் வயிறு காயாது; தயிர்க் கட்டி கலங்கும்,மக்களின் மனம் கலங்காது; நாளும் கிழமையும் மடியலாம், மக்கள் பசியால் மடிந்திடார்; நெற்கதிர்கள் முற்றிச் சாயும், மக்கள் தலை சாய்ந்து நடந்திடார். இத்தகைய பெருமைக்குரியது தென்கரை நாடு.
Wednesday, 11 July 2012
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: இரப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க--முறைப்புதவின் துயம் புகூஉந் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். .....
நாலடியார்
இரப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க--முறைப்புதவின்
துயம் புகூஉந் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
....நாலடியார்
நாம் தருவது சிறிதென்று கருதாது ,இல்லை என்று சொல்லாது எப்போதும் பயனுடைய அறத்தை அனைவரிடத்தும் செய்க.அது வாயில் தோறும பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல ,மெல்ல மெல்ல புண்ணிய பயனைப் பூரணமாக்கும்.

Open Window: நாலடியார்: கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொ...
நாலடியார்
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல்
...நாலடியார்
குறுங்கோலால் அடித்து எழுப்பப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் உள்ளோர் மட்டுமே கேட்பர்.மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் உள்ளோர் மட்டுமே கேட்பர்.ஆனால் 'தகுதியுடையவர்க்கு ஈந்தார்' என்னும் புகழ்ச் சொல்லை ஒன்றன மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களிலும் உள்ளோர் கேட்பர். இது பாத்திரம் அறிந்து பிச்சைஇட வேண்டும் என்று உணர்த்துவதாகும்.

பரிபாடல்
பரிபாடல்
மையோடக் கொவனார் பாட்டு ,
பித்தாமத்தர்இசை,பண்ணுப் பாலை யாழ்
'..திரையிரும் பனிப் பௌவம் செவ்விதா அறமுகந்து
உரவரும் உடன் றார்ப்ப ஊர்ப்பொறை கொள்ளாது
கரையுடை குளமெனக் கழன்றுவான் வயிரழிபு
வரைவரை தொடுத்த வயங்குவெள் ளருவி
இரவிருள் பகலாக இடம் அரிது செலவென்னாது
வலன் இறங்கு முரசில் தென்னவர் உள்ளிய
நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன
பெயலாற் பொலிந்து பெரும்புனல் பல நந்த
நலனந்த நாடணி நந்தப் புலனந்த
வந்தன்று வையைப் புனல் ''
வைகை நீராடச் சென்ற பெண் ,மழையின்வருணனையை, நீரோட்டத்தின் கண் சொல்லிவருவது.
அலையையும் குளிர்ச்சியையும் உடைய கரைய கடலை ,வற்ற முகந்து ,இடி முழங்கத் தன்பாலுள்ள பாரத்தைப் பொறுக்காமல் கரையுடைந்த
குளத்திலுள்ள நீர் சுழல்வதுபோல் ,அப்பாரமானது சுழலும்படி மேகமானது மழையைப் பெய்தது.அதனால் மலைச் சிகரங்களில் அருவி நீர் பெருகிற்று. அங்ஙனம் பெருகிய பெருக்கு வெற்றி முரசையுடைய பாண்டியர்களுடைய போர்ப் படையானது பகைவரது
நாட்டைக் கொள்ளக் கருதிக் கிளர்ந்தது போல வந்தது.அதனால் வையை ஆற்றில் புனல் பெருகி உயிர்களுக்கு நன்மை மிக நஞ்சைகள் அழகு பெறவும் ,புன்செய்கள் விளையவும் வந்தது.

Open Window: நாலடியார் .
Open Window: நாலடியார் .: பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு .........
நாலடியார் .
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு
......நாலடியார் . பழவினை.
பலப் பசுக்களின் கூட்டத்தில் கொண்டுபோய் விட்டாலும்,தான் தாய்ப் பசுவை இனம் கண்டு சேர்வதில் இளங்கன்று வல்லதாகும்.அது போல் முற்பிறவியிற் செய்த பழவினையும்,,அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை உடையதாகும்.
இதனால் அறிவது செய்யும் பாவ புண்ணியங்கள் அந்தப் பிறவியிலேயே கழிந்து விடுவன என்று கருதாது, பின்னும் பல பிறப்பிலும் தொடர்ந்து வரக் கூடியது என்றுணர்ந்து,நல்வினையே செய்ய வேண்டும் .

Open Window: World at ' stalemate positionOur thoughts love t...
Open Window:
World at ' stalemate position
Our thoughts love t...: World at ' stalemate position Our thoughts love to swim in water Our mind aims to go high with delight Where is the axis to be at steady....

Our thoughts love to swim in water
Our mind aims to go high with delight
Where is the axis to be at steady..
Oh, my Lord.! ..........................Good night !.................KOTHAIDHANABALAN
Our thoughts love to swim in water
Our mind aims to go high with delight
Where is the axis to be at steady..
Oh, my Lord.! ..........................Good night !.................KOTHAIDHANABALAN
Art thou pale for weariness
Of climbing heaven and gazing on the earth,
Wandering companionless
Among the stars that have a different birth,
And ever changing, like a joyless eye
That finds no object worth its constancy?
Of climbing heaven and gazing on the earth,
Wandering companionless
Among the stars that have a different birth,
And ever changing, like a joyless eye
That finds no object worth its constancy?
Open Window: சிந்தனைச்செதுக்கல்
Open Window: சிந்தனைச்செதுக்கல்: கடமை,பொறுப்பு முன் நிறுத்தி ,இதன் மீது ஏறிவரும் விருப்பு என்றும் கை இருப்பு! விருப்பு அதன் மீது வைக்கும் கடமையற்ற,பொறுப்பற்ற தேடல் என்றும...
Wednesday, 4 July 2012
புறநானூற்றுச் செய்தி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை
புறநானூற்றுச் செய்தி
மாறோக்கத்து நப்பச்சலையார் ,சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவனை ,பழிப்பது போல் புகழ்ந்து பாடியது.
நஞ்சுடை வாழ் எயிற்று ,ஐந்தலை சுமந்த ,
வேக வெந்திறல் ,நாகம் புக்கெண,
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த ,வெள் வேல்சினங்கெழு தானைச் செம்பியன் மருக,!
கராஅம் கலித்த குண்டுகள் அகழி,
இடம்கருங் குட்டத்து உடன்தொக்கு ஓடி ;
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் ,செம்மல் மூதூர் ,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
;நல்ல என்னாது,சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை !செருவத் தானே!
புறாவின் துயரைப் போக்கிய சிபிச் சக்ரவர்த்தியின் மரபினனே !சினமிகுந்த வேல் தாங்கிய படையை உடையவனே!முதலைகள் நிறைந்த அகழியையும்,இரவு வேளையிலே ,ஊர் காப்பாரின் விளக்கு நிழலைக் கவரும் முதலைகள் திரண்டிருக்கும் நீர் நிறைந்த மடுவினையும்,செம்பாற் செய்தார்போல்
மதிலையுமுடையதும் ,தலைமையோடு விளங்கிய மிகப் பழைய அரண் அங்கே இருந்தது. கச்சணிந்த யானைப் படையுடன் வலி பொருந்திய அரசும் அங்கே இருந்தது.அவற்றை நல்லன என்று பாராது, நச்சுப் பற்களும்,ஐந்தலையும் உடைய நாகம் புக்கது போல் புகுந்து ,வானம் செவ்விருள் பட அவ்வூரை எரியூட்டி
அழித்து, வானத்தும் செந்தீ எழச் செய்தாய். மலைமுழையின் கண்ணே இடிமுழக்கம் எதிர் ஒலித்தாற்போல் அவ்வூரினுள் புகுந்து அதனை அழித்துப் போரிட்டு வெல்லும் வல்லமை உடையவனாயும் இருந்தாய்! பெருந்தகை! நின முன்னோர் அருளும், நின கொடிய வன்மையும் இருந்தவாறு என்னே!

Open Window: சிந்தனைச் செதுக்கல்
Open Window: சிந்தனைச் செதுக்கல்: சிந்தனைச் செதுக்கல் பல கண்கள் காணும் காட்சி ஒன்றாயிருக்கலாம். ஆனால் அவரவர் மனம் அதைக் கண்டு, உணர்த்தும் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கும்...
சிந்தனைச் செதுக்கல்
சிந்தனைச் செதுக்கல்
பல கண்கள் காணும் காட்சி ஒன்றாயிருக்கலாம்.
ஆனால் அவரவர் மனம் அதைக் கண்டு, உணர்த்தும் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
பல கண்கள் காணும் காட்சி ஒன்றாயிருக்கலாம்.
ஆனால் அவரவர் மனம் அதைக் கண்டு, உணர்த்தும் பொருள் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
Open Window: புறநானூற்றுச் செய்தி. , நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி
Open Window: புறநானூற்றுச் செய்தி. , நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி: புறநானூற்றுச் செய்தி. நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங...
புறநானூற்றுச் செய்தி. , நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி
புறநானூற்றுச் செய்தி.
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி கோட்டையை முற்றுகையிடுகிறான்.நெடுங்கிள்ள ியோ போரிலும் பொருதாது, கோட்டை வாசலையும் திறக்காது அடைத்து வைத்திருக்கும் நிலையை புலவர் கோவூர் கிழார் அவனிடம் இடித்துரைக்கும் பாங்கு.
இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும்,மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉ்க் கேட்பவும்,
இன்னாது அம்ம,ஈங்கு இனிது இருத்தல் ;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் !
'அறவை யாயின், 'நினது ' எனத் திறத்தல் ;
மறவை யாயின் போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே .
'பசி மிகுந்த யானைகள் உணவு பெறாது ,கட்டிய கம்பம் வருந்தச் சாய்ந்து,நிலத்திற் புரண்டு ,இடியேறு போலப் பிளிர்கின்றன. பால் இல்லாதவாய் ,,குழந்தைகள் அழுகின்றன.மகளிர் பூவில்லாது வெறுந்தலையை முடிக்கின்றனர். நல்ல வீட்டிலும் குடிநீர் இன்றி வருந்தி மக்கள் கதறுகின்றனர்.இவையெல்லாம் கேட்டும் நாணங் கொள்ளாது இனிதாக இங்கு நீ இருப்பது மிகவும் தவறானது.நெருங்க முடியாத ஆற்றல் மிகுந்த குதிரைகளை உடைய தலைவனே! நீ
அறத்தை உடையவனாயின்,'இது நின் கோட்டையும் தானே , என்று கூறித் திறந்து விட்டு விடு. அன்றி வீரம் உடையவன் என்றால் ,போர் செய்வதற்காக கதவைத் திறந்து ,எதிர்த்துச் செல் . இரண்டுமே செய்யாது ,மதிற் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருத்தல் வெட்கக்கேடு ஆகும்.
நெடுங்கிள்ளியிடம் சென்ற பிறகு நலங்கிள்ளியைக் காணச் செல்கிறார். அங்கு அவனிடம் அவன் குணம் பொறுத்து எடுத்துரைக்கும் பாங்கு இவ்வண்ணம் செல்கிறது..
இரும்பனை வெண் தோடு மலைந்தோ அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியம் ஆர்மிடைந் தன்டூர்; நின்னோடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ;
ஒருவீர் தோற்பினும் , தோற்பது குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே ; அதனால்
குடிப் பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
நின்னை எதிர்த்து நிற்பவன் பணம்பூச் சூடிய சேரன் அல்லன்;
வேப்பந்தார் அணிந்த பாண்டியனும் அல்லன்;
நின் கண்ணியும் ,நயனுடன் போரிடுவோன் கண்ணியும் ஆத்திப் பூவால் ஆயினவே! ஆகவே ,ஒருவர் தோற்றாலும் தோற்பது நும் சோழர் குடி அல்லவோ ! இருவரும் வெற்றி பெறுவது என்பது இயல்பன்றே. அதனால் நும் செயல் குடிப்பெருமைக்குத் தக்கதன்று. நும் போன்ற வேந்தர்க்கு உடல் பூரிக்கும் அளவு நகையுண்டாக்குவதே நீவீர் இயற்றும் போராகும்.
( ஈண்டு இருவரையும் புலவர் இடித்துரைக்கும் பாங்கு நயம் வியந்து போற்றத் தக்கது .)
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனும் இரு சகோதர சோழ மன்னர்கள் தன் அகந்தை தலைக்கேறி ஒருவருக்கொருவர் போரிடுகின்றனர். இங்கு நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி கோட்டையை முற்றுகையிடுகிறான்.நெடுங்கிள்ள

Saturday, 30 June 2012
Open Window: தமிழ் நாட்டில் நிலவிய பஞ்சம்
Open Window: தமிழ் நாட்டில் நிலவிய பஞ்சம்: 1876 இல் தமிழ் நாட்டில் நிலவிய பஞ்சம் ஒரு நாட்டுப் புறப் பாட்டில் இவ்வாறு தெரிவிக்கப் படுகிறது. புழுங்கல் அரிசி சேராதென்று சொன்ன புண்ணிய ம...
தமிழ் நாட்டில் நிலவிய பஞ்சம்
1876 இல் தமிழ் நாட்டில் நிலவிய பஞ்சம் ஒரு நாட்டுப் புறப் பாட்டில் இவ்வாறு தெரிவிக்கப் படுகிறது.
புழுங்கல் அரிசி சேராதென்று சொன்ன
புண்ணிய மகராசா மக்களுக எல்லாம்
மலைக்கத்தாழைக் கருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடக்கென்று கடிப்பாராம்
சீனியிட்டுக் காய்ச்சிய பால் தித்திப்பாய் இல்லையென்று
மேனிநலம் பாராட்டி வந்த மேலோர்கள் தான் ஒடுங்கி
வெப்புசுடு கூழ்அருந்தி மேல்மீசை தாடிகளில்
அப்பி என்ன சொல்லுவேன் அலங்கோலம் ,திப்பியம்மா
நல்லபல காரவர்க்கம் நாம் அருந்தோம் என்று சொல்லிச்
செல்வம் செருக்கிநின்ற ச்செருடையார் செல்லரித்த
தூவல் புளிவிதைக்கும் சோளத் தவிட்டினுக்கும்
ஆவல் கொண்டும் கிட்டாது அலமந்தார்....

Open Window: நாட்டுப்புறத் தாலாட்டு
Open Window: நாட்டுப்புறத் தாலாட்டு: பழங்காலஇலக்கியத்திற்கு அக்காலத்து நாட்டுப் பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம்.இயற்கையோடு ஒட்டி வ...
நாட்டுப்புறத் தாலாட்டு
பழங்காலஇலக்கியத்திற்கு அக்காலத்து நாட்டுப் பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம்.இயற்கையோடு ஒட்டி வாழும் கிராமத்து மக்களில் இயல்பான உணர்ச்சிகளில் உள்ள புதுமைகளை நாட்டுப் பாடல்களில் காணலாம்.
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழுதாய் கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லி அழு
மாமி அடித்தாலோ உன்னை
மல்லிகைப் பூச்செண்டாலே
மாமன் அடித்தானோ உன்னை
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழுதாய் கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லி அழு
மாமி அடித்தாலோ உன்னை
மல்லிகைப் பூச்செண்டாலே
மாமன் அடித்தானோ உன்னை
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!
Open Window: பட்டினப் பாலை.. ....சோழ நாட்டின் சிறப்பு
Open Window: பட்டினப் பாலை.. ....சோழ நாட்டின் சிறப்பு: பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப் பாலை காவிரியின் சிறப்பு வசை இல் ப...
பட்டினப் பாலை.. ....சோழ நாட்டின் சிறப்பு
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடிய
பட்டினப் பாலை
காவிரியின் சிறப்பு
வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
சோழ நாட்டின் சிறப்பு
விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின், கவின் வாடி, 10
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி,
கூட்டு நிழல், துயில் வதியும் 15
கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து, 20
சுடர் நுதல், மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,
குற்றமில்லாத வகையில் ,நீர் வளம் காணாத தென்று மீன்கள் திசை மாறி சென்றாலும் ,காற்று நிலை மாறி பறவையினமும் தன் இரை தேடும் நிலை மாறி ,வான் மழை பொய்த்தாலும் தான் பொய்யாமல தன் மலையிலிருந்து இறங்கி நீர் வளம் பெருக்கி பொன்வ ளம் பல மிகுத்து சேர்த்து கடலில் கலக்கும் காவிரியே சோழ நாட்டின் சிறப்பு ஆகும். விளைவு இல்லை என்று சொல்லா வண்ணம் வயல் தோறும் கரும்பு , அதன் ஆலையிலிருந்து கிளம்பி வரும் மணம்;நீர் பாய்ந்து கடலில் கலக்கும் தூரம் வரை பூச்செடிகள் பலவும், ஆங்கு களத்து மேடுகளில் செந்நெல் கருது அறுத்து காயப் போட்டு , போரடிக்க எருதுகள் பல கூடி தங்கும் நிழல் வசதிகள் அதிகம்; தென்னை, வாழை, பாக்கு, மணமிகு மஞ்சள் ,நல்ல இன வகை சேர்ந்த மா. கிழங்கு வகை,முளை விட்ட இஞ்சி வரையிலுமான அனைத்து பொருளும் பரந்த நகரின் முற்றத்து குவிந்து கிடக்கும்.
ஒளி வீசும் நெற்றியுடைய நால்வகை குணம் நிரம்பிய
நற்குலமிகு மகளிர் முற்றத்து கிடக்கும் நெல் முதலான உணவுப் பொருட்களை கொத்த வரும் கொழியரை எழுந்து பொய் விரட்டுதல் சிரமமென்று காது குழைகளை கழட்டி எறிவார். அது போன சிலம்பணிந்த சிறார் குதிரை என உருட்டி விளையாடும் நடை வண்டிதனின் வழியை மறிக்கும். விலங்கு போன்றவற்றால் பகை உண்டே ஒழிய ,அந்த செழிப்பான ,பல தலைமுறை குடிகளுக்கு வேறு பகை இல்லை.
Friday, 29 June 2012
Open Window: இலங்கை நாட்டுப் புறப பாடல்கள்
Open Window: இலங்கை நாட்டுப் புறப பாடல்கள்: இராமலிங்கம் அவர்களால் நூற்றுக்கணக்கான இலங்கை நாட்டுப் புறப பாடல்கள் பல கிடைத்துள்ளன.இங்குள்ளதொடு ஒப்புநோக்கில் பல காலமாய் பயின்று வந்த ஒற்ற...
இலங்கை நாட்டுப் புறப பாடல்கள்
இராமலிங்கம் அவர்களால் நூற்றுக்கணக்கான இலங்கை நாட்டுப் புறப பாடல்கள் பல கிடைத்துள்ளன.இங்குள்ளதொடு ஒப்புநோக்கில் பல காலமாய் பயின்று வந்த ஒற்றுமை தெரிகிறது.
இலங்கை பாடல்...
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே
அண்ணா அடிச்சானோ அரைஞாண் கயிற்றாலே
ஆண்பனையில் நுங்கே அணில் கோதா மாம்பழமே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்
நமது தமிழ் நாட்டில் சற்று மாறிவரும்.
அண்ணா அடிச்சானோ அரைஞானாண் கயிற்றாலே....என்பது
அத்தை அடிச்சாளோ அள்ளிப் பூச்செண்டாலே ......என வரும்.
மாமன்,அத்தை இவர்களை அந்தந்த இடத்தில் இழுத்து வைத்துப் பாடும் பாடல்களே மெத்த உண்டு.

Open Window: கவிஞர் பாரதிதாசன்
Open Window: கவிஞர் பாரதிதாசன்: கவிஞர் பாரதிதாசன் மூடத்தனத்தை ,நீக்கி நல்ல சமுதாயம் காணத் துடிக்கும் உணர்வை ஒரு பெண் குழந்தைக்கான தாலாட்டில் புலப்படுத்துவது. 'மூடத் தனத்த...
கவிஞர் பாரதிதாசன்
கவிஞர் பாரதிதாசன் மூடத்தனத்தை ,நீக்கி நல்ல சமுதாயம் காணத் துடிக்கும் உணர்வை ஒரு பெண் குழந்தைக்கான தாலாட்டில் புலப்படுத்துவது.
'மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்கைத் துலங்கும் பெருமாட்டி!'
ஆண் குழந்தைக்கான தாலாட்டு.
'வாடப் பலபுரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப் பழக்கத்தைத் தீது என்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா !இளந்தோளா! கண்ணுறங்கு.'

Open Window: இலங்கை பாடல்...
Open Window: இலங்கை பாடல்...: இராமலிங்கம் அவர்களால் நூற்றுக்கணக்கான இலங்கை நாட்டுப் புறப பாடல்கள் பல கிடைத்துள்ளன.இங்குள்ளதொடு ஒப்புநோக்கில் பல காலமாய் பயின்று வந்த ...
இலங்கை பாடல்...
இராமலிங்கம் அவர்களால் நூற்றுக்கணக்கான இலங்கை நாட்டுப் புறப பாடல்கள் பல கிடைத்துள்ளன.இங்குள்ளதொடு ஒப்புநோக்கில் பல காலமாய் பயின்று வந்த ஒற்றுமை தெரிகிறது.
இலங்கை பாடல்...
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே
அண்ணா அடிச்சானோ அரைஞாண் கயிற்றாலே
ஆண்பனையில் நுங்கே அணில் கோதா மாம்பழமே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்
நமது தமிழ் நாட்டில் சற்று மாறிவரும்.
அண்ணா அடிச்சானோ அரைஞானாண் கயிற்றாலே....என்பது
அத்தை அடிச்சாளோ அள்ளிப் பூச்செண்டாலே ......என வரும்.
மாமன்,அத்தை இவர்களை அந்தந்த இடத்தில் இழுத்து வைத்துப் பாடும் பாடல்களே மெத்த உண்டு.
இலங்கை பாடல்...
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே
அண்ணா அடிச்சானோ அரைஞாண் கயிற்றாலே
ஆண்பனையில் நுங்கே அணில் கோதா மாம்பழமே
கூப்பிட்டு நான் கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்
நமது தமிழ் நாட்டில் சற்று மாறிவரும்.
அண்ணா அடிச்சானோ அரைஞானாண் கயிற்றாலே....என்பது
அத்தை அடிச்சாளோ அள்ளிப் பூச்செண்டாலே ......என வரும்.
மாமன்,அத்தை இவர்களை அந்தந்த இடத்தில் இழுத்து வைத்துப் பாடும் பாடல்களே மெத்த உண்டு.
Open Window: ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
Open Window: ஆராரோ ஆராரோ -கண்ணே நீ: பழங்காலஇலக்கியத்திற்கு அக்காலத்து நாட்டுப் பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம்.இயற்கையோடு ஒட்டி வ...
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
பழங்காலஇலக்கியத்திற்கு அக்காலத்து நாட்டுப் பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம்.இயற்கையோடு ஒட்டி வாழும் கிராமத்து மக்களில் இயல்பான உணர்ச்சிகளில் உள்ள புதுமைகளை நாட்டுப் பாடல்களில் காணலாம்.
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழ்தாய் கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லி அழு
மாமி அடித்தாலோ உன்னை
மல்லிகைப் பூச்செண்டாலே
மாமன் அடித்தானோ உன்னை
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!
ஆராரோ ஆராரோ -கண்ணே நீ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழ்தாய் கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லி அழு
மாமி அடித்தாலோ உன்னை
மல்லிகைப் பூச்செண்டாலே
மாமன் அடித்தானோ உன்னை
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!
Wednesday, 27 June 2012
Open Window: நாலடியார்
Open Window: நாலடியார்: அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃதாத்றார் தெருமந்து தேவர் ஒருமாசு ...
நாலடியார்
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாத்றார் தெருமந்து
தேவர் ஒருமாசு உறின்.
....நாலடியார்
அழகிய இடத்தினையுடைய வானத்தில், விரிந்த நிலவொளி பரப்பும் சந்திரனும், மேன்மக்களும் பெரும்பாலும் தம்முள் ஒப்பார். ஆனால் திங்கள் தன்னுள் உள்ள களங்கத்தைப் பொறுத்துக் கொள்ளும். மேன்மக்களோ அது போன்று இலர். அவர்கள் தனது ஒழுக்கத்தில் ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.
Tuesday, 26 June 2012
.நாலடியார்
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் காணாய்
அவந்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகந்துணையா நல்ல கொளல்.
....நாலடியார்
படகு செலுத்துபவனை பழமையான சாதிகளில் கீழ் சாதியென இகழ மாட்டார்கள் மேலோர்.,நீ காண்பாயாக! அப்படகு ஓட்டுபவனின் துணை கொண்டு ஆற்றைக் கடப்பது போலாகும் ,நல்ல சாத்திரங்களைக் கற்ற கீழ்மகனின் துணை கொண்டு நூல் பொருளைக் கற்றல்
People for wisdom won't ill treat a row man on the basis of his lower caste that too also as one among the all old castes. They know, with the help of that man only one can cross a river by boat.
Like that one should never hesitate to improve his knowledge with the help of that one well learned person who comes from lower status .

Wednesday, 20 June 2012
Open Window: நற்றிணையில் ஒரு பாட்டு,
Open Window: நற்றிணையில் ஒரு பாட்டு,: காதலைப் பற்றி படிய பழந்தமிழ் பாடல்களில் பெண்களின் உடல் வர்ணனைகளோ, காமச் சேர்க்கை பற்றிய குறிப்புகளெல்லாம்மிகுதியாக இல்லை. காதலரின் உள்ளத்த...
நற்றிணையில் ஒரு பாட்டு,
காதலைப் பற்றி படிய பழந்தமிழ் பாடல்களில் பெண்களின் உடல் வர்ணனைகளோ,
காமச் சேர்க்கை பற்றிய குறிப்புகளெல்லாம்மிகுதியாக இல்லை. காதலரின்
உள்ளத்து உணர்வுகளே பெரிதும் போற்றி பாடப் பட்டுள்ளன .
நற்றிணையில் ஒரு பாட்டு,
'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்பு பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே..'
'தோழி! நான்சாவுக்கு அஞ்சவில்லை .ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன் .
நான் இறந்து விட்டால் பிறகு வேறு பிறப்பு வந்துவிட்டால் ,அந்த மறுபிறப்பில்
என் காதலனை மறந்துவிடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்.

Open Window: குறுந்தொகைப் பாடல்;
Open Window: குறுந்தொகைப் பாடல்;: இயற்கைபொருள்களில் தெய்வத்தின் தன்மையைக் கண்டு உருகிப் பாடும் முறையும் பரிபாடல் தவிர மற்ற பழைய பாடல்களில் இல்லை. ஆனால் காதல், கொடை,வீரம் இவ...

குறுந்தொகைப் பாடல்;
இயற்கைபொருள்களில் தெய்வத்தின் தன்மையைக் கண்டு
உருகிப் பாடும் முறையும் பரிபாடல் தவிர மற்ற பழைய பாடல்களில் இல்லை.
ஆனால் காதல், கொடை,வீரம் இவற்றைப் பாடும் பொழுது இயற்கையை
அரவணைத்தே அழகாகப் பாடப் பட்டுள்ளன. பிற்காலத்தில் வடமொழியின்
மொழி பெயர்ப்பும்,தழுவலும் அமையும் காலம் வரை அகத்திணை,புறத்திணை மரபுகள் தமிழ் இலக்கியத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.
அகத்திணை மரபு ஆழமாக வேறுன்றிய தன்மை
விளக்கும் ஒரு குறுந்தொகைப் பாடல்;
'வேரல் வேலி வேர்க்கோன் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூக்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே .'
காதலனும் காதலியும் அன்பு கொண்டு களவொழுக்கத்துடன்
திருமணம் கொள்ளாமல் வாழும் நிலையில்
தோழி தன் தலைவியின் நன்மைக்காக
அவள் காதலனிடம் அறிவுறுத்தும் பாடல்.
'மூங்கில் வேலியாக வளர்ந்துள்ள ,
வேரில் கைக்கும் பலாமரங்களையுடைய
நாட்டிற் கு உரியவனே! ,தக்கவனாக ,
தக்க வகையில் நடந்து கொள். யார் அதை அறிவார் ?
மலைச் சாரலில் சிறிய கிளையில் பெரிய பலாப்பழம்
தொங்குவது போல் ,இவளது உயிர் சிறியதாயிருக்க ,
உன் மீது கொண்ட காதல் பெரிதாய் உள்ளது.
'திருமணம் செய்து கொள்ளமால் களவொழுக்கத்தில்
வாழும் காதல் வாழ்க்கை சுமையானது , தாங்கமுடியாதது'
என்று இயற்கை குறிப்பால்அவனுக்கு உணர்த்தப் படுகிறது.
மு.வரதராசன். தமிழ் இலக்கிய வரலாறு
சாகித்திய அக்காடமி

Open Window: நீதி நூல்கள்
Open Window: நீதி நூல்கள்: சங்ககாலங்களில் காதல்,கொடை,வீரம் பற்றியே மகிழ்ந்து படிவந்த புலவர்கட்கு , சேரர்,சோழர்,பாண்டியரின் அமைதியான ஆட்சிக்குப் பிறகு வந்த களப்பிரர்...
நீதி நூல்கள்
சங்ககாலங்களில் காதல்,கொடை,வீரம் பற்றியே மகிழ்ந்து
படிவந்த புலவர்கட்கு , சேரர்,சோழர்,பாண்டியரின் அமைதியான
ஆட்சிக்குப் பிறகு வந்த களப்பிரர் ஆதிக்கத்தில் மக்களுக்குஏற்பட்ட
துன்ப வழ்க்கைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இக்கட்டத்திலேதான்
இன்பங்களையே படிவந்த புலவர்கட்கு மக்கள் எவ்வாறு
வாழ்க்கை சிக்கலில் தப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் கடமை உண்டாக
நீதி நூல்கள் பல அவர்களால் எழுதப்பட்டன. இதை சங்கம் மருவிய காலம்
என்று சரித்திர வல்லுநர் சொல்லுவர். கி.பி. நூறுமுதல்
கி.பி.ஐந்நூறு வரை உள்ள காலம்; பதினென்கீழ்க்கணக்கு , பனிரெண்டு நீதி நூல்களை உள்ளடக்கியது. ஐந்து காதல் பற்றியும்,ஒன்று போரைப் பற்றிய நூல்களாக உள்ளது.நீதி நூல்களில் தலையானது திருக்குறள். திருவள்ளுவர் எழுதிய
திருக்குறள் பற்றி படிக்கும் போது அவரை ஒரு செம்மையான இல்வாழ்க்கை வாழ்ந்தவராயும், பல சமயத்தாரோடு பழகினாலும் பொதுமை நாட்டமே உடையவராய்
அரசியலில் சிறந்த, தேர்ந்த அறிவு பெற்றவராயும்,செய்யும் அறத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவராய் ,
சமய வேடங்களையும்,மூடநம்பிக்கைகளையு ம்
புறக்கணித்தவராய் அறிய முடிகிறது. நெறியோடு வாழ்ந்தால்
தானாகவே அமைவது முக்தி என்பதும்,சிந்தைக்கு எட்டாத அந்த முக்தியைப் பற்றிச் சொற்களால் விளக்கிக் கொண்டிருப்பது வீண் என்பது அவர்தம் கருத்தாக இருக்கக்கூடும். அதனால் வீடு பற்றி விளக்கவில்லை. ஆனால்
மெய்யுணர்தல் என்ற அதிகாரம் அதற்குரிய வழியைக் கூறுவதாகும்.
அறம்பற்றி கூறும் ஒரு குறள்,....
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு,
‘ மறந்தும் பிறருக்கு கெடுதியானவற்றை எண்ணக் கூடாது.அவ்வாறு‘
எண்ணினால் எண்ணியவனுக்கு கெடுதி விளையுமாறு அறமே செய்துவிடும்.

சமய வேடங்களையும்,மூடநம்பிக்கைகளையு

Monday, 18 June 2012
Open Window: ...கோயில்களில் வடமொழி நுழைந்தது!
Open Window: ...கோயில்களில் வடமொழி நுழைந்தது!: வள்ளுவர் காலம் நீதி இலக்கியங்கள் கி பி நூறு முதல் கி பி ஐநூறு வரை...கி பி எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகே வடமொழியிலிருந்து சைனர்கள் சில நூல்க...
...கோயில்களில் வடமொழி நுழைந்தது!
வள்ளுவர் காலம் நீதி இலக்கியங்கள் கி பி நூறு முதல் கி பி ஐநூறு வரை...கி பி எட்டாம் நூற்றாண்டுக்கு பிறகே
வடமொழியிலிருந்து சைனர்கள் சில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தும்,தழுவியும் எழுதத் தொடங்கினர். கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழ் மூவேந்தர்களே .....! அப்போது எங்குமே எதிலுமே தமிழ் ஆண்டது.பல்லவர் காலத்திலேதான் ..... பலவாரான பிரச்சனைகள்...கோயில்களில் வடமொழி நுழைந்தது...இவையெல்லாம் ஆட்சி மாற்றம் காரணமாக நேர்ந்தது.... சைனர்கள் தமிழில் எழுதும் போது பண்டைத் தமிழ் அழியாதிருக்கும் பொருட்டு மதுரை, கபாடபுரம் கண்ட நூல்களுக்கு சங்கம் என்று பெயரிட்டு குறிப்பில் வைத்தனர்..

Saturday, 16 June 2012
Open Window: மணிப்பிரவாளநடை..'
Open Window: மணிப்பிரவாளநடை..': கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தில் பலவாறான குழப்பங்கள் மிகுந்து பல்லவர் ஆட்சி தோன்றியது. அது சமயமே வடமொழி பெரிதான அளவில் ...
மணிப்பிரவாளநடை..'
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தில் பலவாறான
குழப்பங்கள் மிகுந்து பல்லவர் ஆட்சி தோன்றியது. அது சமயமே வடமொழி
பெரிதான அளவில் காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டுஊடுருவலாயிற்று.
மகேந்திரவர்ம மன்னன் போன்றோர் அதற்கு
ஆதரவு அளித்த நிலையில் தமிழும், வட மொழி
யும் தனி்த் துவமாக வளர்ந்து பல நூல்கள் மொழிப்பரிவர்த்தனை
செய்து கொள்ளப்பட்டன.அவ்வமயம் அறிஞர்கள் சிலர்வடமொழி
சொற்கள் அதிகம் கலந்த தமிழை'மணிப்பிரவாளநடை..'எனப் பெயரிட்டு ஒற்றுமை கருதி
நூல்கள் பல எழுதினர் சில.ஆழ்வார் பாடல்களுக்கு விளக்க உரை எழுதிய வைணவப் பெரியார்களும்,ஜைனப்புலவர் களும் இதில்
அடங்குவர்.ஆனால் கிரந்த மொழியில் வடமொழியை எழுதி வந்தனர்.
ஏனோ, ஒரு நாட்டு மக்களின் வாழ்விலும்,சிந்தையிலும் வழிவழியாக
ஊறி வளர்ந்து விட்ட ஒரு மொழியின் தன்மையை படித்தவர் சிலர் சேர்ந்து
முயற்சி செய்து மாற்றி விட முடியாது என்பதை அறிந்திருக்க வில்லை.எனவே
அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. கம்பர் போன்ற பெரும்பாலான புலவர்களும்,
பழைய இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதியபுலவர்களும்,அதைப்
போற்றாது தமிழுக்கு இயல்பாகவே எழுதினார்கள்.இவற்றின் விளைவுதான்
விபீஷனன் விபீடனானது,அகல்யா அகலிகை ஆனதெல்லாம்..!
இவ்வாறாக வடொழிச்சொற்களை மிகுதியாக திணிக்கும் முயற்சி ஒரு
புறம் நடக்க,தேவையான சொற்களை தமிழ் ஒலிக்குத்தக்க அமைந்த முயற்சியும்
மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் தமிழ்ச் சொற்களும்,ஒலிகளும் காக்கும்
முயற்சியே வெற்றி பெற்றது. மேலும் ஒரு சங்கதி....கி,பி.ஏழாம் நூற்றாண்டுகளில் திருநாவுக்கரசர் சிவபெருமானை எல்லாம் ஆனவன்
என்று பாடும் இடத்து ..'ஆரியன் கண்டாய்..தமிழன் கண்டாய் ' என்று இந்தியாவின் கலைவழிப்பட்ட பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டார். இதுவே
பின்னாளில் சிவன், வடமொழியை பாணினிக்கும், தமிழை
அகத்கியனுக்கும் உரியதாக்கும் புராணக்கதைகளுக்கு அடிகோலியது.

Thursday, 14 June 2012
Open Window: ......திருக்குறள்...பெருமை..
Open Window: ......திருக்குறள்...பெருமை..: ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை இனி ஒருவர்க்கு அ ஃது இறந்து வாழ்தும் எனல் ......திருக்குறள்...பெருமை..௯௭ ௧ ஒருவன் தன்னால் அரிய பெரிய காரியங...
......திருக்குறள்...பெருமை..
ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை இனி ஒருவர்க்கு
அ ஃது இறந்து வாழ்தும் எனல்
......திருக்குறள்...பெருமை..௯௭ ௧
ஒருவன் தன்னால் அரிய பெரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியும்
என்று தன்னுடைய திறமையில் தன்னம்பிக்கை உள்ளவனாய் இருப்பது
புகழத் தக்கதுதான்.ஆனால் அந்த நம்பிக்கை அளவு கடந்து அகங்காரம்
ஆகிவிடல் ஆகாது. அதுவே நல் வாழ்வைக் கெடுத்து விடும்.
We should never let self confidence into over confidence. For it will lead to disaster only..!
அ ஃது இறந்து வாழ்தும் எனல்
......திருக்குறள்...பெருமை..௯௭
ஒருவன் தன்னால் அரிய பெரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியும்
என்று தன்னுடைய திறமையில் தன்னம்பிக்கை உள்ளவனாய் இருப்பது
புகழத் தக்கதுதான்.ஆனால் அந்த நம்பிக்கை அளவு கடந்து அகங்காரம்
ஆகிவிடல் ஆகாது. அதுவே நல் வாழ்வைக் கெடுத்து விடும்.
We should never let self confidence into over confidence. For it will lead to disaster only..!
Open Window: .....திருக்குறள்......பெருமை.
Open Window: .....திருக்குறள்......பெருமை.: பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான் .....திருக்குறள்......பெருமை. அகங்காரமில்லாத பெருமைதான் ஒருவன...
.....திருக்குறள்......பெருமை.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
.....திருக்குறள்......பெருமை.
அகங்காரமில்லாத பெருமைதான் ஒருவனுக்கு சிறப்பு உண்டாக்குவது.
எல்லா மனிதர்களும் பிறப்பினால் ஒரே மாதிரியானவர்களே.
ஆனால் அவரவர் காரியம் செய்யும் திறமை வேறுபடுதலால்
சிறப்புக்கள் ஒரே மாதிரி அடைய முடியாது.
By birth we all are equal. But our dignity definitely varies and only depends upon the merit of the talented career what we adopt with us.

Subscribe to:
Posts (Atom)