பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு
......நாலடியார் . பழவினை.
பலப் பசுக்களின் கூட்டத்தில் கொண்டுபோய் விட்டாலும்,தான் தாய்ப் பசுவை இனம் கண்டு சேர்வதில் இளங்கன்று வல்லதாகும்.அது போல் முற்பிறவியிற் செய்த பழவினையும்,,அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை உடையதாகும்.
இதனால் அறிவது செய்யும் பாவ புண்ணியங்கள் அந்தப் பிறவியிலேயே கழிந்து விடுவன என்று கருதாது, பின்னும் பல பிறப்பிலும் தொடர்ந்து வரக் கூடியது என்றுணர்ந்து,நல்வினையே செய்ய வேண்டும் .

No comments:
Post a Comment