Wednesday, 20 June 2012

நீதி நூல்கள்

சங்ககாலங்களில் காதல்,கொடை,வீரம் பற்றியே மகிழ்ந்து 
படிவந்த புலவர்கட்கு , சேரர்,சோழர்,பாண்டியரின் அமைதியான 
ஆட்சிக்குப் பிறகு வந்த களப்பிரர் ஆதிக்கத்தில் மக்களுக்குஏற்பட்ட
துன்ப வழ்க்கைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இக்கட்டத்திலேதான்
இன்பங்களையே படிவந்த புலவர்கட்கு மக்கள் எவ்வாறு
வாழ்க்கை சிக்கலில் தப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் கடமை உண்டாக 
நீதி நூல்கள் பல அவர்களால் எழுதப்பட்டன. இதை சங்கம் மருவிய காலம்
என்று சரித்திர வல்லுநர் சொல்லுவர். கி.பி. நூறுமுதல் 
கி.பி.ஐந்நூறு வரை உள்ள காலம்; பதினென்கீழ்க்கணக்கு , பனிரெண்டு நீதி நூல்களை உள்ளடக்கியது. ஐந்து காதல் பற்றியும்,ஒன்று போரைப் பற்றிய நூல்களாக உள்ளது.நீதி நூல்களில் தலையானது திருக்குறள். திருவள்ளுவர் எழுதிய
திருக்குறள் பற்றி படிக்கும் போது அவரை ஒரு செம்மையான இல்வாழ்க்கை வாழ்ந்தவராயும், பல சமயத்தாரோடு பழகினாலும் பொதுமை நாட்டமே உடையவராய் 
அரசியலில் சிறந்த, தேர்ந்த அறிவு பெற்றவராயும்,செய்யும் அறத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவராய் ,
சமய வேடங்களையும்,மூடநம்பிக்கைகளையும்
புறக்கணித்தவராய் அறிய முடிகிறது. நெறியோடு வாழ்ந்தால்
தானாகவே அமைவது முக்தி என்பதும்,சிந்தைக்கு எட்டாத அந்த முக்தியைப் பற்றிச் சொற்களால் விளக்கிக் கொண்டிருப்பது வீண் என்பது அவர்தம் கருத்தாக இருக்கக்கூடும். அதனால் வீடு பற்றி விளக்கவில்லை. ஆனால்
மெய்யுணர்தல் என்ற அதிகாரம் அதற்குரிய வழியைக் கூறுவதாகும்.

அறம்பற்றி கூறும் ஒரு குறள்,....

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு,


‘ மறந்தும் பிறருக்கு கெடுதியானவற்றை எண்ணக் கூடாது.அவ்வாறு‘
எண்ணினால் எண்ணியவனுக்கு கெடுதி விளையுமாறு அறமே செய்துவிடும்.

No comments:

Post a Comment