Saturday, 30 June 2012

பட்டினப் பாலை.. ....சோழ நாட்டின் சிறப்பு


பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடிய

பட்டினப் பாலை


காவிரியின் சிறப்பு

வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி,
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5

மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்


சோழ நாட்டின் சிறப்பு

விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின், கவின் வாடி, 10

நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி,
கூட்டு நிழல், துயில் வதியும் 15

கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து, 20

சுடர் நுதல், மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் 25

விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,





குற்றமில்லாத வகையில் ,நீர் வளம் காணாத தென்று மீன்கள் திசை மாறி சென்றாலும் ,காற்று நிலை மாறி பறவையினமும் தன் இரை தேடும் நிலை மாறி ,வான் மழை பொய்த்தாலும் தான் பொய்யாமல தன் மலையிலிருந்து இறங்கி நீர் வளம் பெருக்கி பொன்வ ளம் பல மிகுத்து சேர்த்து கடலில் கலக்கும் காவிரியே சோழ நாட்டின் சிறப்பு ஆகும். விளைவு இல்லை என்று சொல்லா வண்ணம் வயல் தோறும் கரும்பு , அதன் ஆலையிலிருந்து கிளம்பி வரும் மணம்;நீர் பாய்ந்து கடலில் கலக்கும் தூரம் வரை பூச்செடிகள் பலவும், ஆங்கு களத்து மேடுகளில் செந்நெல் கருது அறுத்து காயப் போட்டு , போரடிக்க எருதுகள் பல கூடி தங்கும் நிழல் வசதிகள் அதிகம்; தென்னை, வாழை, பாக்கு, மணமிகு மஞ்சள் ,நல்ல இன வகை சேர்ந்த மா. கிழங்கு வகை,முளை விட்ட இஞ்சி வரையிலுமான அனைத்து பொருளும் பரந்த நகரின் முற்றத்து குவிந்து கிடக்கும்.
ஒளி வீசும் நெற்றியுடைய நால்வகை குணம் நிரம்பிய
நற்குலமிகு மகளிர் முற்றத்து கிடக்கும் நெல் முதலான உணவுப் பொருட்களை கொத்த வரும் கொழியரை எழுந்து பொய் விரட்டுதல் சிரமமென்று காது குழைகளை கழட்டி எறிவார். அது போன சிலம்பணிந்த சிறார் குதிரை என உருட்டி விளையாடும் நடை வண்டிதனின் வழியை மறிக்கும். விலங்கு போன்றவற்றால் பகை உண்டே ஒழிய ,அந்த செழிப்பான ,பல தலைமுறை குடிகளுக்கு வேறு பகை இல்லை.

No comments:

Post a Comment