புறநானூற்றுச் செய்தி
மாறோக்கத்து நப்பச்சலையார் ,சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவனை ,பழிப்பது போல் புகழ்ந்து பாடியது.
நஞ்சுடை வாழ் எயிற்று ,ஐந்தலை சுமந்த ,
வேக வெந்திறல் ,நாகம் புக்கெண,
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த ,வெள் வேல்சினங்கெழு தானைச் செம்பியன் மருக,!
கராஅம் கலித்த குண்டுகள் அகழி,
இடம்கருங் குட்டத்து உடன்தொக்கு ஓடி ;
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் ,செம்மல் மூதூர் ,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
;நல்ல என்னாது,சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை !செருவத் தானே!
புறாவின் துயரைப் போக்கிய சிபிச் சக்ரவர்த்தியின் மரபினனே !சினமிகுந்த வேல் தாங்கிய படையை உடையவனே!முதலைகள் நிறைந்த அகழியையும்,இரவு வேளையிலே ,ஊர் காப்பாரின் விளக்கு நிழலைக் கவரும் முதலைகள் திரண்டிருக்கும் நீர் நிறைந்த மடுவினையும்,செம்பாற் செய்தார்போல்
மதிலையுமுடையதும் ,தலைமையோடு விளங்கிய மிகப் பழைய அரண் அங்கே இருந்தது. கச்சணிந்த யானைப் படையுடன் வலி பொருந்திய அரசும் அங்கே இருந்தது.அவற்றை நல்லன என்று பாராது, நச்சுப் பற்களும்,ஐந்தலையும் உடைய நாகம் புக்கது போல் புகுந்து ,வானம் செவ்விருள் பட அவ்வூரை எரியூட்டி
அழித்து, வானத்தும் செந்தீ எழச் செய்தாய். மலைமுழையின் கண்ணே இடிமுழக்கம் எதிர் ஒலித்தாற்போல் அவ்வூரினுள் புகுந்து அதனை அழித்துப் போரிட்டு வெல்லும் வல்லமை உடையவனாயும் இருந்தாய்! பெருந்தகை! நின முன்னோர் அருளும், நின கொடிய வன்மையும் இருந்தவாறு என்னே!

No comments:
Post a Comment