கைத்தாயும் அல்லை கணவருக்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலோடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானல் தடம் உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரோடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பார் யாமொருநாள்
ஆடுதும் என்ற அணியிழைக்குஅவ் வாயிழையாள்
பீடன்று எனவிருந்த பின்னரே நீடிய ..
...... புகார்க் காண்டம் , கனாத் திறம் உரைத்த காதை
கனாத் திறம் கேட்ட தேவந்தி கண்ணகியை நோக்கி ,'பொன்னாலான வளையலை அணிந்தவளே! நீ அவனால் வெறுக்கப் படவில்லை.முற்பிறப்பில் கணவன் பொருட்டு செய்ய வேண்டிய நோன்பைத் தவற விட்டிருக்கிறாய் அதனால் ஏற்பட்ட தீங்கு மறைய,
காவிரி தன் நீரையெல்லாம் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அழைக்கும் புகாருக்கு அருகே தழை மலர் மனம் பரப்பும் நெய்தல் நிலத்தில் உள்ள சோலையிலே சோமகுண்டம்,சூர்யா குண்டம் எனும் இரு பொய்கைகள் உள்ளன. அத்துறைகளில் மூழ்கி எழுந்து காமவேள் கோட்டம் சென்று காமவேளை வணங்கும் மகளிர் இம்மையில் தன கணவருடன் கூடி இணை பிரியாது வாழ்வார்.
மறுமையிலும் போக பூமியில் தேவராய்ப் பிறந்து பிரியாது இன்பம் நுகர்வர். எனவே நாமும் அங்கு அவ்வாறு நீராடச் செல்வோம் வா' என்கிறாள்.
அது கேட்ட கண்ணகி .' அங்ஙனம் துறை மூழ்கித் தொழுதல் எங்கள் இயல்பன்று!' என்று மறுத்து விடுகிறாள்.
[இதனைத் தீர்த்த மூடம்,தெய்வ மூடம் என விலக்கும் சமணம்]
இவ்வரிகள் கண்ணகி தன் துயர் காலத்தும் துறவாக் கொள்கை கொண்டதை விளக்குவன.
No comments:
Post a Comment