பரிபாடல்
மையோடக் கொவனார் பாட்டு ,
பித்தாமத்தர்இசை,பண்ணுப் பாலை யாழ்
'..திரையிரும் பனிப் பௌவம் செவ்விதா அறமுகந்து
உரவரும் உடன் றார்ப்ப ஊர்ப்பொறை கொள்ளாது
கரையுடை குளமெனக் கழன்றுவான் வயிரழிபு
வரைவரை தொடுத்த வயங்குவெள் ளருவி
இரவிருள் பகலாக இடம் அரிது செலவென்னாது
வலன் இறங்கு முரசில் தென்னவர் உள்ளிய
நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன
பெயலாற் பொலிந்து பெரும்புனல் பல நந்த
நலனந்த நாடணி நந்தப் புலனந்த
வந்தன்று வையைப் புனல் ''
வைகை நீராடச் சென்ற பெண் ,மழையின்வருணனையை, நீரோட்டத்தின் கண் சொல்லிவருவது.
அலையையும் குளிர்ச்சியையும் உடைய கரைய கடலை ,வற்ற முகந்து ,இடி முழங்கத் தன்பாலுள்ள பாரத்தைப் பொறுக்காமல் கரையுடைந்த
குளத்திலுள்ள நீர் சுழல்வதுபோல் ,அப்பாரமானது சுழலும்படி மேகமானது மழையைப் பெய்தது.அதனால் மலைச் சிகரங்களில் அருவி நீர் பெருகிற்று. அங்ஙனம் பெருகிய பெருக்கு வெற்றி முரசையுடைய பாண்டியர்களுடைய போர்ப் படையானது பகைவரது
நாட்டைக் கொள்ளக் கருதிக் கிளர்ந்தது போல வந்தது.அதனால் வையை ஆற்றில் புனல் பெருகி உயிர்களுக்கு நன்மை மிக நஞ்சைகள் அழகு பெறவும் ,புன்செய்கள் விளையவும் வந்தது.

No comments:
Post a Comment