கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல்
...நாலடியார்
குறுங்கோலால் அடித்து எழுப்பப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் உள்ளோர் மட்டுமே கேட்பர்.மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் உள்ளோர் மட்டுமே கேட்பர்.ஆனால் 'தகுதியுடையவர்க்கு ஈந்தார்' என்னும் புகழ்ச் சொல்லை ஒன்றன மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களிலும் உள்ளோர் கேட்பர். இது பாத்திரம் அறிந்து பிச்சைஇட வேண்டும் என்று உணர்த்துவதாகும்.

No comments:
Post a Comment