Monday, 19 March 2012

சிலப்பதிகாரம்


இந்திர விழாவெடுத்த காதையில் வேறு வேறு கடவுளரைக் கண்டோம்.அதனை அடுத்து வருவது,
 

அறவோர் பள்ளியும் அறணோம் படையும்
புறநிலைக் கோட்டத்து புண்ணியத் தனமும்
திறவோர் உரைக்குஞ் செயல்திறந் தொருபால்
...
கொடித்தேர் வேந்தனோடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந் தொருபால்
கண்ணு லாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடர் பாணரோடு
எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால்
 முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ........................

 அருகர்,புத்தர் நடத்தும் அறவோர் பள்ளிகளிலும், அறத்தை போற்றும் அறசாலைகளிலும்,
மதில் புறத்தே உள்ள புண்ணிய இடங்களில் அறத்தின் கூறுபாடுகள் உணர்ந்து ஆறாம் போதிக்கும் செயல்
ஒரு பக்கம் நிறைவேறுகிறது,
கொடியுடன் கூடிய சோழ வேந்தனோடு மாறுபட்டு போரில் தோற்ற அரசர்களது கைவிலங்குகள் அகற்றப்பட்டன..
விடுதலை அருள் சிறந்தோங்கி ஒரு பக்கம் தெரிகிறது.
கொப்த்தரும்,தோற்கருவியாளரும், யாழிசைப் புலவரும், வாய்ப்பாடகரான பாணர் ஆகிய இவர்களது எண்ணற்ற இசைகள்
ஒரு பக்கம் சிறந்து விளங்கின.
இரவு பகல் ஓயாது முழவுகள் முழங்கின. குறுந்தெருக்களும் , நெடுஞ்சாலைகளும் இந்திர விழாவின் களிப்பில் மூழ்கித் திளைத்தன.

[ அரசர்கள் விடுதலை, சமணர்கள், புத்தர்கள் அறம் செய்யும்
பள்ளிகள், மதிலுக்கு வெளியே புண்ணிய இடங்களில் அறம் போதித்தல் கவனிக்கத் தக்கது.]


No comments:

Post a Comment