கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தில் பலவாறான
குழப்பங்கள் மிகுந்து பல்லவர் ஆட்சி தோன்றியது. அது சமயமே வடமொழி
பெரிதான அளவில் காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டுஊடுருவலாயிற்று.
மகேந்திரவர்ம மன்னன் போன்றோர் அதற்கு
ஆதரவு அளித்த நிலையில் தமிழும், வட மொழி
யும் தனி்த் துவமாக வளர்ந்து பல நூல்கள் மொழிப்பரிவர்த்தனை
செய்து கொள்ளப்பட்டன.அவ்வமயம் அறிஞர்கள் சிலர்வடமொழி
சொற்கள் அதிகம் கலந்த தமிழை'மணிப்பிரவாளநடை..'எனப் பெயரிட்டு ஒற்றுமை கருதி
நூல்கள் பல எழுதினர் சில.ஆழ்வார் பாடல்களுக்கு விளக்க உரை எழுதிய வைணவப் பெரியார்களும்,ஜைனப்புலவர் களும் இதில்
அடங்குவர்.ஆனால் கிரந்த மொழியில் வடமொழியை எழுதி வந்தனர்.
ஏனோ, ஒரு நாட்டு மக்களின் வாழ்விலும்,சிந்தையிலும் வழிவழியாக
ஊறி வளர்ந்து விட்ட ஒரு மொழியின் தன்மையை படித்தவர் சிலர் சேர்ந்து
முயற்சி செய்து மாற்றி விட முடியாது என்பதை அறிந்திருக்க வில்லை.எனவே
அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. கம்பர் போன்ற பெரும்பாலான புலவர்களும்,
பழைய இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதியபுலவர்களும்,அதைப்
போற்றாது தமிழுக்கு இயல்பாகவே எழுதினார்கள்.இவற்றின் விளைவுதான்
விபீஷனன் விபீடனானது,அகல்யா அகலிகை ஆனதெல்லாம்..!
இவ்வாறாக வடொழிச்சொற்களை மிகுதியாக திணிக்கும் முயற்சி ஒரு
புறம் நடக்க,தேவையான சொற்களை தமிழ் ஒலிக்குத்தக்க அமைந்த முயற்சியும்
மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் தமிழ்ச் சொற்களும்,ஒலிகளும் காக்கும்
முயற்சியே வெற்றி பெற்றது. மேலும் ஒரு சங்கதி....கி,பி.ஏழாம் நூற்றாண்டுகளில் திருநாவுக்கரசர் சிவபெருமானை எல்லாம் ஆனவன்
என்று பாடும் இடத்து ..'ஆரியன் கண்டாய்..தமிழன் கண்டாய் ' என்று இந்தியாவின் கலைவழிப்பட்ட பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டார். இதுவே
பின்னாளில் சிவன், வடமொழியை பாணினிக்கும், தமிழை
அகத்கியனுக்கும் உரியதாக்கும் புராணக்கதைகளுக்கு அடிகோலியது.

No comments:
Post a Comment