Saturday, 30 June 2012

நாட்டுப்புறத் தாலாட்டு

பழங்காலஇலக்கியத்திற்கு அக்காலத்து நாட்டுப் பாடல்களே தாயாக அமைந்து தோற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தன எனலாம்.இயற்கையோடு ஒட்டி வாழும் கிராமத்து மக்களில் இயல்பான உணர்ச்சிகளில் உள்ள புதுமைகளை நாட்டுப் பாடல்களில் காணலாம்.


ஆராரோ ஆராரோ -கண்ணே நீ 
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழுதாய் கண்ணே உன்னை 
அடித்தவரைச் சொல்லி அழு 
மாமி அடித்தாலோ உன்னை 
மல்லிகைப் பூச்செண்டாலே 
மாமன் அடித்தானோ உன்னை 
மாலையிடும் கையாலே
அக்கா அடித்தாலோ உன்னை
அலரிப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லியழு -அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்
தொட்டாரைச் சொல்லியழு -அவர்க்கு
தோள்விலங்கு பூட்டிடுவேன்
யாரும் அடிக்கவில்லை என்னை
ஐவிரலும் தீண்டவில்லை
பசிக்கல்லோ நானழுதேன் -என்றன்
பாசமுள்ள தாயாரே!

No comments:

Post a Comment