Wednesday, 20 June 2012

நற்றிணையில் ஒரு பாட்டு,

காதலைப் பற்றி படிய பழந்தமிழ் பாடல்களில் பெண்களின் உடல் வர்ணனைகளோ,
காமச் சேர்க்கை பற்றிய குறிப்புகளெல்லாம்மிகுதியாக இல்லை. காதலரின் 
உள்ளத்து உணர்வுகளே பெரிதும் போற்றி பாடப் பட்டுள்ளன .
நற்றிணையில் ஒரு பாட்டு,

'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன் 
பிறப்பு பிறிது ஆகுவ தாயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே..'

'தோழி! நான்சாவுக்கு அஞ்சவில்லை .ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன் .
நான் இறந்து விட்டால் பிறகு வேறு பிறப்பு வந்துவிட்டால் ,அந்த மறுபிறப்பில் 
என் காதலனை மறந்துவிடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்.

No comments:

Post a Comment