Saturday, 14 April 2012

திரிகடுகம்

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் 
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதவன் 
கோளாளன் என்பான் மறவாதவன் , இம்மூவர் 
கேளாக வாழ்தல் இனிது 
 
.......திரிகடுகம்
 
 
முயற்சியுடைய ஒருவன் என்றும் வாளாவிருந்து  பிறரிடத்தில்
கடன்பட்டுப் போகும் நிலையை அடைய மாட்டான்.
 உதவும் தன்மையுடைய 
ஒருவன் தன் வீட்டில் விருந்தினர்  பசித்து இருக்க  தான் புசிக்க மாட்டான்.
கொள்கையுடையன் என்ற பெயர் எடுத்தவன் நல்ல சங்கதிகள் எதையும்
மறக்கமாட்டான். இத்தகைய மூவரையும் ஒருவன் தன்  நட்பாய் பெற்றிருந்தானால்
அவன் வாழ்வில்
இன்பமே  விளங்கும்.

No comments:

Post a Comment