திருவின் திரல் உடைய இல்லை - ஒருவர்க்குக்
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும்
இன்மையின் இன்னாத இல்லை இலம் என்னும்
வன்மையின் வன்பாட்ட இல்.
.......நான்மணிக்கடிகை
செல்வத்தைப் போல வலிமையுடையது பிறிதில்லை.
கற்கும் கல்வி போல ஒருவனுக்கு உற்ற துணை வேறு எதுவும் இல்லை.
எல்லாவற்றுள்ளும் வறுமையைப் போலத் துன்பம் எதுவுமில்லை.
அந்த வறியவர் தமக்கு இல்லை என்ற சொல் சொல்லாத மனவளத்தைப் போல் வளமையான ஒன்று எதுவுமில்லை.
No comments:
Post a Comment