Sunday, 29 April 2012

சிலப்பதிகாரம் ..காடுகான்காதை

வாழ்த்தி வந்திருந்தேன் இதுவென் வரவுஎனத் 
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு 
மாமுறை முதல்வ மதுரைச் செந்நெறி 
கூறு நீஎனக் கோவலற்கு உரைக்கும் 
 கோத்தொழி ளாலரோடு   கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் 
தநலம் திருகத் தன்மையில் குன்றி 
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து 
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் 
காலை எய்தினர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர்  வேலியும் முறைபடக் கிடந்த இந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று 
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய 
அறைவாய்ச்    சூழத் தருநெறி கவர்க்கும்
 
.............சிலப்பதிகாரம் ..காடுகான்காதை



மறையோன், பாண்டிய நாட்டின் பண்பை அறிந்தவன்
அதலால் கோவலன் ,' வேத முதல்வனே! மதுரைக்குச் செல்லும் வழி பற்றி
கூறுக !' என வேண்டினான். அது கேட்டு ,' அரசியலில் அமைச்சரோடு
மாறுபாடு கொண்டு அரசன் தன போக்கில் செயல்பட ,அதனால் ஆட்சியையே இழந்து
அல்லலுறும் நாடு போல, வேனில் எனும் அமைச்சனுடன் வெவ்விய கதிர்களையுடைய
அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க ,முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு
கெட்டுத்தன்னைச் சார்ந்தாரை நடுங்கச் செய்யும் ; பாலை எனக் கூறப்படும் கொடுந்தன்மையுறும்.
இத்தகைய வேனிர்காலத்தே காரிகையுடன் கடும் பயணத்தை மேற்கொண்டீரே! கற்பாறைகளும்,
சிறுமலைகளும்,மயக்கம் தரும் கானல்நீர் வேலியும் கலந்து கிடக்கும் இந்த நீண்ட பாலை வழியைக்
கடந்து சென்று கொடும்பாளூர் ,நெடுங்குளம் என்னும் இரண்டு ஊர்களுக்கும் பொதுவான
ஏரிக்கரையை அடைந்தால், பிறை சூடிய சிவபெருமானின் முத்தலைச் சூலம் போல கடத்தற்கரிய மூன்று வழிகள் பிரியும்!'
எனக் கூறி மேலும் அவற்றை விரிவாக எடுத்துரைத்தான் அம்மறையோன். 


· ·

No comments:

Post a Comment